கடனாளியின் வீட்டுக்குச் சீல் - குத்தகைதாரர் தவிப்பு

author img

By

Published : Sep 18, 2021, 8:49 AM IST

வாடகைதாரர் தவிப்பு

மயிலாடுதுறையில் கடனாளியின் வீட்டிற்குத் தனியார் நிதி நிறுவனத்தினர் சீல் வைத்ததால் குத்தகைதாரர் வெளியேற முடியாமல் தவித்துவருகிறார்.

மயிலாடுதுறை: காந்தி நகரில் ராஜேஷ் என்பவருக்குச் சொந்தமாக வீடு உள்ளது. இவரது வீட்டில் புருஷோத்தமன் (66) என்பவர் கடந்த ஏழு ஆண்டுகளாக குத்தகைக்கு வசித்துவருகிறார்.

ராஜேஷ் கும்பகோணம் தனியார் நிதி நிறுவனத்தில் (சுந்தரம் பைனான்ஸ்) 60 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கடன் பெற்று வீட்டை வாங்கியுள்ளார். மாதம் 92 ஆயிரத்து 203 ரூபாய் 120 மாதங்கள் செலுத்த வேண்டும். ஆறு மாதம் மட்டுமே பணம் செலுத்தியுள்ளார். மீதிக் கடன் தொகையைத் திரும்பச் செலுத்தாததால் நிதி நிறுவனத்தினர் நீதிமன்றத்தின் வாயிலாக அவரது வீட்டை ஜப்தி செய்வதற்கு அனுமதி பெற்றனர்.

வாடகைதாரர் தவிப்பு

இதையடுத்து கடந்த 15ஆம் தேதி நிதி நிறுவனத்தினர் ராஜேஷின் வீட்டைப் பூட்டிச் சீல்வைத்தனர். இந்நிலையில் 16ஆம் தேதி காலை குத்தகைக்கு குடியிருந்த புருஷோத்தமனுக்கு இந்தச் சம்பவம் தெரியவந்தது.

வீட்டிற்குச் சீல் வைக்கும்போது யாரும் இல்லை எனத் தனியார் நிதி நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் புருஷோத்தமன் வீட்டின் உரிமையாளரிடமிருந்து தான் கொடுத்த பணத்தைப் பெற்றுத் தருமாறு காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐஐடி வளாகத்தில் நாய்கள் எண்ணிக்கையை குறைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.