ETV Bharat / state

'கோடநாடு கொலை வழக்கு விசாரணை செய்வதில் தவறில்லை' - சரத்குமார்

author img

By

Published : Aug 29, 2021, 10:51 PM IST

kodanadu murder case  kodanadu murder  sarathkumar talks about kodanadu murder case  samathuva makkal katchi  samathuva makkal katchi sarathkumar  mayiladuthurai news  mayiladuthurai latest news  மயிலாடுதுறை செய்திகள்  சரத்குமார்  சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்  சமத்துவ மக்கள் கட்சி  கோடநாடு கொலை  கோடநாடு கொலை வழக்கு
சரத்குமார்

எலந்தங்குடியில் ஹோட்டல் திறப்பு விழாவிற்கு வந்த சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத் குமார், கோடநாடு கொலை வழக்கு விசாரணை செய்வதில் தவறில்லை என்று கூறியுள்ளார்.

மயிலாடுதுறை: குத்தாலம் தாலுகா, எலந்தங்குடியில் ஹோட்டல் திறப்பு விழாவிற்காக சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் வருகை புரிந்திருந்தார்.

அப்போது செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது, 'நல்லதைப் பாராட்டுவதும், தவறை சுட்டிக்காட்டுவதுதான் அரசியல் நாகரிகம்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், புகழாரம் வேண்டாம் என்று கூறிவது வரவேற்கத்தக்கது. இது, பேரவையின் நேரத்தை சிறப்பாகப் பயன்படுத்துவதற்கு உதவும்.

செய்தியாளர்களை சந்தித் சரத்குமார்...

விரைவில் முடிவெடுக்கப்படும்

கோடநாடு இறப்புக் கொலையா, தற்கொலையா என விசாரணை நடத்துவதில் தவறொன்றும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணி குறித்து, ஆகஸ்ட் 31ஆம் தேதி நடைபெற உள்ள மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்படும்.

உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை அரசியல் கட்சியைச் சார்ந்துதான் வெற்றிபெற முடியும் என்பது கிடையாது. போட்டியிடும் வேட்பாளர்களின் செயல்பாடுகள் தான் வெற்றியைத் தீர்மானிக்கிறது.

வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி தமிழ்நாடு அரசு தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. இதுகுறித்த முழுவிவரங்கள் தெரியாததால், கருத்துக் கூற விரும்பவில்லை.

கேரள மாநிலத்தில், கரோனா தொற்று அதிகரிப்பதாக செய்தி வருகிறது. கரோனா பாதிப்பைக் கட்டுப்படுத்த வேண்டும்.

பள்ளிகள் திறக்காததால் குழந்தைகளுக்கு மன அழுத்தம் ஏற்படும். அதனையும் கருத்தில்கொண்டு குழந்தைகள் பாதுகாப்பாக பள்ளிக்கு செல்வதை உறுதி செய்யவேண்டும்' என்றார்.

இதையும் படிங்க: திருமண மண்டபத்தை திறந்து வைத்த ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.