ETV Bharat / state

தடையை மீறி தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்!

author img

By

Published : Jan 2, 2021, 7:12 AM IST

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள், குடும்பத்தினரோடு குவிந்தனர்.

tharangambadi beach
தடையை மீறி தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்

மயிலாடுதுறை: கரோனா பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கடற்கரையிலும், சாலைகளிலும் மக்கள் கூட மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம் தடைவிதித்திருந்தது.

புத்தாண்டு தினத்தை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி கடற்கரையில் தடையை மீறி சுற்றுலாப் பயணிகள் பொதுமக்கள், குடும்பத்தினரோடு குவிந்தனர்.

வழக்கமாக புத்தாண்டையொட்டி டிசம்பர் 31, ஜனவரி 1ஆகிய தேதிகளில் தரங்கம்பாடி கடற்கரைப் பகுதியில் ஏராளமான சுற்றுலாப் பயணிகள், உள்ளூர் பொதுமக்கள் கூடுவர்.

இந்தாண்டு கரோனா பரவலைக் கருத்தில்கொண்டு அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி கடற்கரைப் பகுதிகள், உணவகங்கள், கேளிக்கை விடுதிகளில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா தடைவிதித்து உத்தரவிட்டிருந்தார்.

தடையை மீறி தரங்கம்பாடி கடற்கரையில் குவிந்த மக்கள்

இதனால், டிசம்பர் 31, ஜனவரி 1,2 ஆகிய தேதிகளில் கடற்கடைப்பகுதியில் பொதுமக்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. ஆனால், தரங்கம்பாடி கடற்கரைப்பகுதியில் தடையை மீறி சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் குடும்பத்தினரோடு குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

பொறையார் காவலர்கள், கடலோர காவல்நிலைய காவலர்கள் எச்சரிக்கை செய்தும் தடையை மீறி பொதுமக்கள் கடற்கரையில் குவிந்தது கரோனா குறித்த விழிப்புணர்வு குறைந்துள்ளதை காட்டுவதாக உள்ளது.

இதையும் படிங்க: தடையை மீறி புத்தாண்டு கொண்டாடிய மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.