ETV Bharat / state

வங்கி அலுவலர் என்று கூறி பெண்ணிடம் லட்சக்கணக்கில் பணம் மோசடி

author img

By

Published : Mar 14, 2022, 11:13 AM IST

வங்கி அலுவலர் என்று கூறி பெண்ணிடம் பணத்தை மோசடி
வங்கி அலுவலர் என்று கூறி பெண்ணிடம் பணத்தை மோசடி

மயிலாடுதுறையில் வங்கி அலுவலர் என்று கூறி பெண்ணிடம் ரூ.8.5 லட்சம் பணத்தை மோசடி செய்த இளைஞரை காவல்துறையினர் கைது செய்தனர்.

மயிலாடுதுறை மேலஒத்தசரகு தெருவை சேர்ந்தவர் விஜயகுமாரின் மனைவி வெற்றிச்செல்வி(35). இவரிடம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சுப்பையன் மகன் முருகன்(37) என்பவர் தான் தனியார் வங்கியில் மேலாளராக வேலைபார்ப்பதாகவும் பணிமாறுதலில் மயிலாடுதுறை கிளைக்கு வந்துள்ளதாக கூறியுள்ளார்.

தனக்கு அரசியல் செல்வாக்கு இருக்கிறது நிறைய அமைச்சர்கள் தெரியும் உங்களுக்கு மின்வாரியத்தை வேலைவாங்கி தருகிறேன் என்று கூறியுள்ளார். ஆனால் வெற்றி செல்வியின் கணவர் ஒத்துகொள்ளாமல் இருந்துள்ளார். அதன்பின்பு கல்வி அமைச்சரை தெரியும் பள்ளியில் ஆசிரியர் வேலைவாங்கி தருகிறேன் என்று கூறியதும் தனது நகைகளை அடமானம் வைத்து கணவரை கட்டாயப்படுத்தி ஆசிரியை வேலைக்காக ரூ.8.5 லட்சம் பணத்தை கடந்த அக்டோபர் மாதம் 26ஆம் தேதி முருகனிடம் கொடுத்துள்ளார்.

அமைச்சரின் உதவியாளரிடம் பணத்தை கொடுத்து அதற்கான கடிதத்தை வாங்கி தருவதாக கூறி வெற்றிச்செல்வியின் கணவர் விஜயகுமாரை அழைத்துகொண்டு திருச்சி சென்றவர். நீங்கள் காரிலேயே இருங்கள் அமைச்சரின் உதவியாளரை பார்த்துவிட்டு வருகிறேன் என்று கூறி சென்றார். பின்னர் பலமணி நேரம் ஆகியும் ஆள் வரவில்லை.

பல லட்சம் மோசடி

இதனையடுத்து கார் டிரைவரை கேட்டபோது வாடகைக்கு வந்தவர் என்பது தெரியவந்துள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த வெற்றிச்செல்வி பல இடங்களில் விசாரித்து எந்த தகவலும் கிடைக்காததால் கடந்த நவம்பர் மாதம் மயிலாடுதுறை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன் பின் இன்ஸ்பெக்டர் செல்வம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் இளையராஜா, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரமேஷ், நரசிம்மபாரதி, கார்த்திக் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைத்து முருகனை தேடி வந்தனர்.

இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தனிப்படை காவல்துறையினர் முருகனை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். தொடர்ந்து நடத்திய விசாரணையில், வெற்றிச்செல்வி போன்று தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் படித்த பெண்களை குறிவைத்து வேலைவாங்கி தருவதாக கூறி பல லட்சம் மோசடி செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து முருகனை மயிலாடுதுறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

இதையும் படிங்க: திருச்சியில் ஜெயகுமாருக்கு உற்சாக வரவேற்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.