ETV Bharat / state

'I.N.D.I.A' கூட்டணி ஆட்சியில் நீட் தேர்வு இருக்காது: திமுக எம்.பி திருச்சி சிவா

author img

By

Published : Aug 20, 2023, 10:26 PM IST

2024ம் ஆண்டு இந்தியா கூட்டணி வெற்றிபெறும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும்! திருச்சி சிவா உறுதி
2024ம் ஆண்டு இந்தியா கூட்டணி வெற்றிபெறும்போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும்! திருச்சி சிவா உறுதி

2024 நாடாளுமன்றத் தேர்தலில் 'இந்தியா' கூட்டணி வெற்றி பெறும் போது நீட் தேர்வு ரத்து செய்யப்படும் என திமுக கொள்கை பரப்பு செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமன திருச்சி சிவா தெரிவித்துள்ளார்.

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டு மாணவர்களின் மருத்துவர் கனவை சிதைத்து மாணவர்களின் உயிர் மட்டுமின்றி, அவர்களின் பெற்றோரின் உயிரையும் கொல்லும் உயிர்க்கொல்லியாக நீட் தேர்வு உள்ளதாகவும், அதனை ரத்து செய்யக்கோரியும் திமுக இளைஞர் அணி, மாணவர் அணி மற்றும் மருத்துவர் அணி சார்பில் இன்று ( ஆகஸ்ட் 20) தமிழ்நாடு முழுவதும் உண்ணாவிரதம் போராட்டம் நடைபெற்றது.

இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் எதிரில் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மருது, மாவட்ட மாணவரணி அமைப்பாளர் செந்தில், மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர் பாலாஜி ஆகியோர் முன்னிலையில்
மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

அதனை தொடர்ந்து மாவட்ட திமுக செயலாளரும் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினருமான நிவேதா எம்.முருகன் பேசுகையில், “அரியலூர் அனிதாவில் தொடங்கி குரோம்பேட்டை ஜெகதீஸ்வரன், அவரது தந்தை செல்வசேகரன் வரை தொடரும் நீட் மரணத்துக்கு திமுக தலைவர் நிச்சயம் முடிவு கட்டுவார்” என பேசினார்.

முன்னதாக திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவைக்குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி பேசியதாவது; “மாநில அரசாங்கம் வேண்டாம் என்று சொல்லும் நீட் தேர்வை திணிப்பது விடுதலை பெற்ற நாடா? எங்கள் மாநில மக்களின் தேவை என்பது எங்களுக்குத் தான் தெரியும். அதற்கு தேவையான சட்டங்களை இயற்றுகின்ற கடமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுக்கு உண்டு.

இதையும் படிங்க: "ஆளுநர் ரவியே நீங்கள் யார்..?" - நீட் தேர்வுக்கு எதிரான உண்ணாவிர மேடையில் கர்ஜித்த உதயநிதி!

மாநில அரசு சொல்வதை கேட்கும் நிலைக்கு மத்திய அரசு செல்லும் போது தான் இந்திய அரசு விரும்புகின்ற இடத்துக்குச் செல்லும். எங்களுக்கு வேண்டாம் என்பதை எதற்காக திணிக்கிறீர்கள் என்று கேட்பது மாநில சுயாட்சியின் குரல். எங்கள் மாநிலத்தில் இளைஞர்களின் உயிர் பறிபோவதை தடுக்க வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. 2024-ஆம் ஆண்டு இந்தியா கூட்டணி வெற்றி பெறும் போது நீட் தேர்வு தமிழகத்துக்கு கிடையாது. கல்வி மாநில பட்டியலில் மீண்டும் வந்து சேரும். கச்சத்தீவு மீண்டும் இந்தியா வசம் வரும். அதற்கான முயற்சிகளில் ஈடுபடுவோம்” என்றார்.

இதில், மக்களவை உறுப்பினர் ராமலிங்கம், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர் கல்யாணம், சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம், மயிலாடுதுறை சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.ராஜகுமார் மற்றும் திமுக மாவட்ட, நகர, ஒன்றிய, பேரூர் நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணி, மாணவர் அணி, மருத்துவர் அணி நிர்வாகிகள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.மேலும், மாலை திமுக கொள்கை பரப்பு செயலாளரும், மாநிலங்களவைக்குழுத் தலைவருமான திருச்சி சிவா எம்.பி., சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று உண்ணா விரத போராட்டத்தில் அனைவருக்கும் ஜூஸ் வழங்கி போராட்டத்தை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: நாங்குநேரி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆறுதல் கூறிய அண்ணாமலை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.