ETV Bharat / state

மயிலாடுதுறை மாவட்டத்தில் 33 ஆயிரம் வாக்காளர்கள் நீக்கம்.. பின்னணி என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 27, 2023, 8:24 PM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்
மயிலாடுதுறை மாவட்டத்தில் வெளியிடப்பட்ட வாக்காளர் பட்டியல்

mayiladuthurai voter list: வரைவு வாக்காளர் பட்டியலை மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான மகாபாரதி இன்று வெளியிட்டார். மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் இருந்து 33 ஆயிரத்து 650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

மயிலாடுதுறை: இந்திய நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில், வாக்காளர்களின் பட்டியல் தயாரிக்கும் பணியை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப் படுத்தியுள்ளது. இந்நிலையில் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு 2024-ஆம் ஆண்டுக்கான திருத்தம் செய்யப்பட்ட புகைப்படத்துடன் கூடிய வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தப் பட்டியலை இன்று (அக்.27) அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் மாவட்ட ஆட்சியர் மகாபாரதி வெளியிட்டார்.

மயிலாடுதுறை மாவட்டத்தின் வரைவு வாக்காளர் பட்டியல்:

மாவட்டம்ஆண் வாக்காளர்கள்பெண் வாக்காளர்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்த எண்ணிக்கை

மயிலாடுதுறை

(3 சட்டமன்ற தொகுதி)

3,65,735 3,72,128 20 7,37,883

இதில் புதியதாக 7 ஆயிரத்து 393 பேர் புதியதாக சேர்க்கப்பட்டுள்ளதாகவும், 33 ஆயிரத்து 650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய விரும்பும் நபர்கள் தொடர்ந்து உரிய படிவங்களை தொடர்புடைய அலுவலங்களில் சமர்ப்பித்தோ அல்லது இணையதள மூலமும் பதிவு செய்து பயன்பெறலாம் என்றும் , அதற்காக சிறப்பு முகாம்கள் செயல்படும் என்றும் மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் மகாபாரதி தெரிவித்துள்ளார்.

தொகுதி வாரியாக வாக்காளர்கள் விபரம்:

தொகுதிஆண் வாக்காளர்கள்பெண் வாக்காளர்கள்மூன்றாம் பாலினத்தவர்மொத்த எண்ணிக்கை
மயிலாடுதுறை 11,7,325 11,9,650 9 2,36,984
சீர்காழி 1,24,834 1,28,663 7 2,36,984
பூம்புகார் 1,34,669 1,38,979 4 2,73,652

மேலும், கடந்த பத்து மாதங்களில் மட்டும் மயிலாடுதுறை மாவட்டத்தில் டபுள் என்ட்ரி, இறப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 33 ஆயிரத்து 650 பேர் நீக்கம் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அனைத்து வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்கள், அனைத்து உதவி வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலங்கள் மற்றும் வாக்கு சாவடி மையங்களில் 27.10.2023 முதல் 09.12.2023 வரை அனைத்து வேலை நாட்களிலும் வாக்காளர் பட்டியிலில் பெயர் சேர்த்தல் / நீக்கல்/ திருத்தல் தொடர்பான படிவங்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிறப்பு முகாம்கள் நடைபெறும் நாட்கள்: மேலும் 04.11.2023, 05.11.2023 மற்றும் 18.11.2023. 19.11.2023 ஆகிய நாட்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் / நீக்கல் / திருத்தல் தொடர்பான சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெற உள்ளது.

வாக்காளர் பட்டியலை பொதுமக்கள் நேரடியாக பார்வையிடலாம்: தொடர்ந்து வாக்காளர் பட்டியலை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச்சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் / வருவாய் கோட்ட அலுவலர் அலுவலகங்கள் மற்றும் உதவி வாக்காளர் பதிவு அலுவலர் / வட்டாட்சியர் மற்றும் மாநகராட்சி ஆணையர் அலுவலகங்களில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும். பொதுமக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டியலை நேரடியாக பார்வையிடலாம் என மயிலாடுதுறை மாவட்டத் தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சியருமான மகாபாரதி தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.