குளத்தில் முதலை நடமாட்டம் - பொதுமக்கள் அச்சம்

author img

By

Published : May 14, 2022, 5:26 PM IST

முதலையை பிடிக்க பொறிவைத்த வனத்துறை

மயிலாடுதுறை அருகேவுள்ள ஓம குளத்தில் முதலை இருப்பதாக கிராம மக்கள் கூறிய நிலையில் வனத்துறையினர் முதலையை பிடிக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

மயிலாடுதுறை: வரதம்பட்டு கிராமத்தில் சுமார் இரண்டரை ஏக்கர் பரப்பளவில் ஓமக்குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தில் கடந்த இரண்டு நாள்களாக முதலை ஒன்று தென்படுவதாகவும், அடிக்கடி குளக்கரையில் ஏறிவந்து இளைப்பாறுவதாகவும் ஊர் மக்கள் பேசியுள்ளனர்.

இதனால், அப்பகுதி மக்கள் உடனடியாக வருவாய்த்துறை மற்றும் சீர்காழி வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து மயிலாடுதுறை வட்டாட்சியர் மகேந்திரன் சம்பவ இடத்திற்குச் சென்று சோதனை மேற்கொண்டார். சீர்காழி வனச்சரக அலுவலர் ஜோசப் டேனியல் உத்தரவுப்படி வனவர் கதாநாயகன் தலைமையில் வனத்துறையினர் ஓமக்குளத்திற்கு வந்து முதலையை பிடிப்பதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதலையை பிடிக்க பொறிவைத்த வனத்துறை

மூன்று இடங்களில் 4 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி, கோழி இறைச்சியை வைத்தும், கரைகளில் கோழி இறைச்சிகளை போட்டும் முதலையை பிடிப்பதற்கு பொறிவைத்துள்ளனர். குளத்திற்கு அருகேவுள்ள பழவாறு வழியாக முதலை குளத்திற்கு வந்திருக்கலாம் என பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இதையும் படிங்க: அழகான காட்சி: குட்டிகளுடன் சாலையை கடக்கும் புலி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.