ETV Bharat / state

அதிமுக அரசை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம்!

author img

By

Published : Dec 23, 2020, 3:43 PM IST

நாகப்பட்டினம்: கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மீனவர்களுக்கு தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என தெரிவித்த நிலையில், அதற்கான பணிகள் தொடங்காததை கண்டித்து மீனவர்கள் கடலில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றனர்.

கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள்
கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள்

நாகப்பட்டினம் அடுத்துள்ள சாமந்தான்பேட்டை மீனவ கிராமத்திற்கு தூண்டில் வளைவுடன் கூடிய மீன் இறங்கு தளம் அமைக்கப்படும் என கடந்த 2015ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் பணிகள் இதுவரை தொடங்காமல் இருப்பதை கண்டித்து அப்பகுதி மீனவர்கள் கடந்த மூன்று நாள்களாக காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இரண்டாவது நாளான நேற்று (டிச.22) நடைபெற்ற சாமந்தான்பேட்டை கிராம மீனவர்களின் போராட்டத்தில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மீன்வளத் துறை அலுவலர்கள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது, புதிய திட்டம் தயார் செய்து தரப்படும் என அலுவலர்கள் கூறியதற்கு பழைய திட்டத்திலேயே கட்டுமான பணிகை தொடங்க வேண்டும் என மீனவர்கள் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம் நடத்திய மீனவர்கள்

கடலில் இறங்கி ஆர்ப்பாட்டம்:

தொடர்ந்து அலுவலர்களின் பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத காரணத்தால், நேற்றிரவு (டிச.22) தீப்பந்தம் ஏந்தி போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இந்நிலையில், மூன்றாவது நாளாக இன்று (டிச.23) தமிழ்நாடு அரசு தங்களது கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி தரவேண்டும் என்றும், மாவட்ட ஆட்சியர், அமைச்சர்கள் தங்களின் கோரிக்கைமை இதுவரை நேரில் வந்து கேட்காததை கண்டித்தும் மீனவர்கள் குடும்பத்துடன் கடலில் இறங்கி அரசுக்கு எதிரான முழக்கங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வேதனை தெரிவித்த மீனவ பெண்

மேலும், தங்களது கோரிக்கைகளுக்கு அரசு செவிசாய்க்கும் வரை தங்களது போராட்டங்களை பல்வேறு வடிவங்களில் தீவிரப்படுத்தப்படும் என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: "வாய்மையே வெல்லும்" தார்மீக உரிமையை மீறிவிட்ட அரசு - டாஸ்மாக் மூடாததற்கு கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.