'கடல் அரிப்பைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்' - ஈபிஎஸ்

author img

By

Published : Sep 21, 2021, 9:38 PM IST

sea erosion  eps statement  eps  eps statement to tamilnadu government  eps statement to tamilnadu government to prevent sea erosion  Edappadi Palaniswami  tn government  chennai news  chennai latest news  nagapattinam  nagapattinam beach  beach  சென்னை செய்திகள்  இபிஎஸ்  எடப்பாடி பழனிசாமி  எடப்பாடி பழனிசாமி அறிக்கை  தமிழ்நாடு அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அறிக்கை  கடல் அறிப்பு  அறிக்கை
கடல் அரிப்பு ()

நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவக் கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை உடனடியாகத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை: நாகப்பட்டினம், நம்பியார் நகர் மீனவக்கிராமத்தில் ஏற்பட்டுள்ள கடல் அரிப்பை உடனடியாகத் தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், 'கடந்த 45 நாட்களுக்கும் மேலாக நாகப்பட்டினம் மாவட்ட கடலோரப் பகுதிகளில், கடல் கொந்தளிப்பு ஏற்பட்டு, கடல் நீர் சுமார் 100 மீட்டர் தூரம் ஊருக்குள் வந்துவிட்டதாக செய்திகள் வந்துள்ளன.

உட்புகுந்த கடல் நீர்

நாகப்பட்டினம் நகரம், நம்பியார் நகர் மீனவ கிராம மக்களுக்கு அதிமுக அரசு சிறு மீன்பிடித் துறைமுகம் கட்டுவதற்கு ஆணைகள் பிறப்பித்து, அதன்படி தற்போது சிறு மீன்பிடித் துறைமுகம் கட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இச்சூழ்நிலையில் கடந்த 45 நாட்களுக்கும் மேலாக, இந்தப் பகுதியில் கடல் கொந்தளிப்பு மிகவும் அதிகமாக உள்ளது என்று இப்பகுதி மக்கள் புகார் அளித்துள்ளனர்.

அதன்படி, நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் இல்ல அலுவலகம் மற்றும் காவல் கண்காணிப்பாளர் இல்ல அலுவலகம் எதிரில் உள்ள நம்பியார் நகர் சிறு மீன்பிடித் துறைமுகத்தின் வடக்குப் பக்கமாக, கடல் கொந்தளிப்பால் சுமார் 500 மீட்டர் நீளத்திற்கும் மேலாக கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் சுமார் 100 மீட்டர் நிலப் பகுதியினுள் உட்புகுந்துள்ளது.

போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை

இதனால் சுமார் 10 வீடுகள், பல மின் கம்பங்கள் சேதமடைந்து விழுந்து விட்டன. கொந்தளிக்கும் கடலால் இப்பகுதியினுள் மேலும் கடல் நீர் உட்புகுந்து பாதிப்புகள் அதிகரிக்கக்கூடும் என்று இப்பகுதி மீனவ மக்கள் அச்சத்தில் உள்ளனர்.

மேலும், இதனால் நாகப்பட்டினம் நகருக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்ற ஆபத்தான நிலையும் உள்ளது. ஏற்கெனவே, 1994-95ஆம் ஆண்டில் இதுபோன்ற ஒரு நிலைமை ஏற்பட்டபோது, அப்போதைய மாநிலங்களவை உறுப்பினரும், தற்போதைய வேதாரண்யம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. ஓ.எஸ். மணியன், அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் நாகப்பட்டினம் மாவட்டம், கீழ்வேளூர் தாலுகா, பிரதாவராமபுரம் ஊராட்சியில் உள்ள செருதூர் மீனவக் கிராமத்தில் கடல் கொந்தளிப்பினால் கடல் அரிப்பு ஏற்பட்டு, கடல் நீர் உட்புகுந்துள்ளது என்ற தகவலைச் சொன்னவுடன், ஜெயலலிதா உடனடியாக சம்பந்தப்பட்ட அலுவலர்களை அழைத்து, போர்க்கால அடிப்படையில் மீட்பு நடவடிக்கைகளை எடுக்குமாறு உத்தரவிட்டார்.

அதன்படி, கடல் அலைகளின் வேகத்தைத் தடுக்கும் வகையில் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் கடல் மணலில் புதைக்கப்பட்டு, அலைகளின் வேகம் பெருமளவில் தடுக்கப்பட்டு, கடல் அரிப்பு முழுமையாக நிறுத்தப்பட்டது.

அதே போல் உட்புகுந்த அனைத்து இடங்களிலும் போர்க்கால அடிப்படையில் கடல் அரிப்பைத் தடுக்க உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” எனத் தெரிவித்திருந்தார்.

இதையும் படிங்க: ஒரு லட்சம் புதிய மின் இணைப்புகள்: ஸ்டாலினை நேரில் சந்தித்து விவசாயிகள் நன்றி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.