ETV Bharat / state

பேருந்தில் மோதி உயிரிழந்த தாய்: ரூ.10,000 நிதி உதவி வழங்கி தூய்மைப்பணியாளர்கள் அஞ்சலி!

author img

By

Published : Jul 19, 2023, 10:50 PM IST

பேருந்தில் மோதி உயிரிழந்த பெண் துப்புரவு பணியாளர்: ரூ.10,000 நிதி உதவியும் வழங்கி அஞ்சலி செலுத்திய மயிலாடுதுறை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்!
பேருந்தில் மோதி உயிரிழந்த பெண் துப்புரவு பணியாளர்: ரூ.10,000 நிதி உதவியும் வழங்கி அஞ்சலி செலுத்திய மயிலாடுதுறை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்!

சேலத்தில் பேருந்தில் மோதி உயிரிழந்த பெண் தூய்மைப் பணியாளர் பாப்பாத்திக்கு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி, மலர்த் தூவி, அஞ்சலி செலுத்தியதோடு அவரது குடும்பத்தினருக்கு ரூ.10,000 நிதி உதவியும் வழங்கியுள்ளனர்.

பேருந்தில் மோதி உயிரிழந்த பெண் துப்புரவு பணியாளர்: ரூ.10,000 நிதி உதவியும் வழங்கி அஞ்சலி செலுத்திய மயிலாடுதுறை ஒப்பந்த தூய்மை பணியாளர்கள்!

நாகப்பட்டினம்: தன் குழந்தைகளின் கல்விக்காக பேருந்தின் முன் பாய்ந்த ஏழை தாய் பாப்பாத்திக்கு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை ஒப்பந்த தூய்மைத் தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர்த்தூவி அஞ்சலி செலுத்தினர்.

சேலம் மாவட்டம், முள்ளுவாடிகேட், மறைமலை அடிகள் தெருவைச் சேர்ந்தவர், 46 வயதான பாப்பாத்தி. இவர் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தூய்மைப் பணியாளராகப் பணியற்றி வந்துள்ளார். கணவரைப் பிரிந்த நிலையில் இவர் கடந்த 15 ஆண்டுகளாக தன் தாயார் வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இவருக்கு 2 குழந்தைகள், மகள் மற்றும் மகன் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கடந்த மாதம் 28ம் தேதி காலை, இரண்டாவது அக்ரஹாரம் பகுதியில் தனியார் பேருந்து ஒன்று மோதியதில் பாப்பாத்தி உயிரிழந்தார் என சொல்லப்பட்டது. விபத்து தொடர்பாக டவுன் காவல் ஆய்வாளர் மோகன்பாபு கண்ணா மற்றும் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

தொடர்ந்து விபத்து குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை காவல் துறையினர் ஆய்வு செய்தனர். அதில் அவர் சம்பவத்திற்கு முன் அந்த வழியாக வந்த பேருந்து ஒன்றின் முன் விழுவதற்கு ஓடிச் சென்றிருக்கிறார். அப்போது இருசக்கர வாகனம் ஒன்று குறுக்கே வந்திருக்கிறது. அதில் மோதி கீழே விழுந்த பாப்பாத்தி, இரண்டாவதாக வந்த பேருந்தின் முன் விழுந்து தற்கொலை செய்துகொள்ளும் காட்சியும் இடம்பெற்றிருந்தது.

இதையும் படிங்க: காதல் விவகாரத்தில் மோதல்.. பழங்குடியின இளைஞர் மீது தாக்கி சிறுநீர் கழித்த கொடூரம்! 6 பேர் கைது!

இந்த விபத்துக்கு நான் காரணம் இல்லை என்று ஓட்டுநர் தெரிவித்திருந்தார். காவல்துறை தரப்பில் விபத்து என்று முதலில் வழக்குப் பதிவு செய்த நிலையில், தற்போது சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வுசெய்து பார்த்தபோது பாப்பாத்தி தானாகவே பேருந்தின்முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டது பதிவாகியிருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியது.

இது குறித்த காவல்துறையினர் விசாரணையில், பாப்பாத்தியின் மகள், மகன் ஆகிய இருவரும் கல்லூரியில் பயின்று வருகின்றனர். இருவருக்கும் கல்லூரி படிப்புக்கான கட்டணத்தைக் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்துள்ளார். வறுமையில் வாழ்ந்து வந்த அவர் மன அழுத்தத்தில் இருந்துள்ளார்.

அதனால் விபத்தில் இறந்தால் நிவாரண பணம் கிடைக்கும் என்று யாரோ கூறியிருக்கின்றனர். அதனைத்தொடர்ந்து பேருந்தின்முன் பாய்ந்து இறந்தால் நிவாரணத்தொகை கிடைக்கும். அதில் தன் குழந்தைகள் படித்து முன்னேறி கொள்வார்கள் என்ற எண்ணத்தில் தற்கொலை செய்துகொண்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் உயிரிழந்த பெண் தூய்மை பணியாளர் பாப்பாத்திக்கு மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனையில் ஒப்பந்த தூய்மை தொழிலாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மலர் தூவி, கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினர். மேலும் 10,000 ரூபாய் நிதி உதவியும் வழங்கினர்.

மயிலாடுதுறை அரசினர் மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பாப்பாத்தியின் உருவப்படத்துக்கு, மலர் தூவி, கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி கண்ணீர் மல்க அவர்கள் அஞ்சலி செலுத்தினர். மேலும் பலர் கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக அமைந்தது. தொடர்ந்து இந்த மருத்துவமனையில் பணியாற்றும் தூய்மைத் தொழிலாளர்கள் 95 பெரும் இணைந்து தங்கள் பங்களிப்பாக பாப்பாத்தியின் குடும்பத்தினருக்கு 10,000 ரூபாய் நிதி உதவியை வழங்குவதாக கூறினர்.

இதையும் படிங்க: ரூட்டு தல விவகாரம்: ரயில் நிலையத்தில் மோதிக்கொண்ட மாணவர்கள் கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.