ETV Bharat / state

‘டாஸ்மாக் கடையில் பாட்டிலுக்கு 10 ரூபாய் கூடுதலாக வாங்கும் பிச்சைக்காரன் யார்?’ - சர்ச்சை பேனரால் பரபரப்பு

author img

By

Published : May 28, 2023, 10:46 PM IST

Etv Bharat
Etv Bharat

நாகப்பட்டினத்தில் ‘அரசு டாஸ்மாக் மதுபான கடையில் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்?’ என கேள்வி கேட்கப்பட்டு மயிலாடுதுறையில் உள்ள டாஸ்மாக் கடைகள் இயங்கும் பகுதியில் வைக்கப்பட்ட பேனர்களால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சர்ச்சையான டாஸ்மாக் பேனர்

நாகப்பட்டினம்: தமிழ்நாட்டில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் நடத்தப்பட்டு வருகிறது. டாஸ்மாக் மதுபாட்டில்களின் அதிகபட்ச விலை வரிகள் உட்பட எத்தனை ரூபாய் என்று மதுபாட்டில்களிலேயே பிரிண்ட் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஆனால், ஒவ்வொரு மதுபாட்டில்களில் அச்சிடப்பட்ட விலையை விட கூடுதலாக 10 ரூபாய் டாஸ்மாக் கடைகளில் சட்டத்திற்கு புறம்பாக வசூலிக்கப்படுகிறது.

கடந்த சில நாட்களாக டாஸ்மாக் கடைகளில் கூடுதலாக பத்து ரூபாய் வசூல் செய்யப்படுவது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில் மயிலாடுதுறை மாவட்டம், சித்தர்காட்டில் உள்ள இரண்டு அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் உள்ள பகுதிகளில் கூடுதலாக மதுபான பாட்டில்களுக்கு பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? என்று எங்களுக்கு தெரிய வேண்டும் அதுவரை கடையை மூடுமாறு பேனர் வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அந்த பேனரில் 'தமிழ்நாட்டில் உள்ள தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் டாஸ்மாக்களில் அதிகபட்ச விலை வரிகள் உட்பட என பிரிண்ட் செய்து விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், அனைத்து டாஸ்மாக்களிலும் அரசு நிர்ணயித்த விலையை விட கூடுதலாக பத்து ரூபாய் விற்பனை செய்யப்படுகிறது.

அந்த பத்து ரூபாய் யாருக்கு செல்கிறது என்று தெரியும் வரை கூடுதல் விலை விற்கக்கூடாது; அப்படி மீறி விற்பனை செய்தால், டாஸ்மாக் கடையை இழுத்து மூடப்படும், அந்த கூடுதல் பத்து ரூபாய் பெரும் பிச்சைக்காரன் யார்? என்று எங்களுக்கு தெரிய வேண்டும். அதுவரை கடையை மூடுமாறு டாஸ்மார்க் நிறுவனத்திடம் கேட்டுக்கொள்கிறோம்' என்று பேனரில் உள்ளது. இந்த பேனர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

இந்த நிலையில், சித்தர்காடு பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை உள்ள பகுதிகளில் வைக்கப்பட்ட இந்த பேனர் இன்று (மே 28) அகற்றப்பட்டது. பேனரை வைத்தவர்களே பேனரை கழட்டி எடுத்து சென்று விட்டதாகவும், டாஸ்மாக் கடை மேலாளர் தெரிவித்தார். ஆனாலும், அங்கு மதுபானம் வாங்கி வந்தவர்களிடம் இது குறித்து கேட்டபோது, 130 ரூபாய் குவாட்டர் மதுபாட்டிலுக்கு 140 ரூபாய் டாஸ்மாக் கடையில் வாங்குவதாகவும் தெரிவித்தனர். இந்த பேனரால் மயிலாடுதுறையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இயங்கும் அனைத்து டாஸ்மாக் கடைகளிலும் ஒரு மதுபாட்டிலுக்கு கூடுதலாக பத்து ரூபாய் வாங்கி வருவதாக, பலரும் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டு டாஸ்மாக் கடை ஊழியர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டு வந்தது. இருந்தபோதிலும், தொடர்ந்து டாஸ்மாக் கடைகளில் இந்த விவகாரம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இது குறித்து சமீபத்தில் அமைச்சர் செந்தில் பாலாஜியிடம் செய்தியாளர்கள் கேட்டபோதும், அவர் இந்த விவகாரத்தில் சரியான பதிலை கூறாமல் மழுப்பலாக பதில் கூறி அங்கிருந்து நகர்ந்து சென்றார். இந்நிலையில், இந்த டாஸ்மாக் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: IT RAID: அமைச்சர் செந்தில் பாலாஜி உறவினர் டாஸ்மாக் ஒப்பந்ததாரர் வீடு மற்றும் கே.எஸ்.எம் அலுவலகத்தில் ஐ.டி.ரெய்டு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.