ETV Bharat / state

ஆடி அமாவாசை விசேஷம்: காவிரி சங்கமத்தில் குவிந்த மக்கள்!

author img

By

Published : Aug 16, 2023, 11:55 AM IST

sirkali
சீர்காழி

சீர்காழி அருகே பூம்புகாரில் ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி ஆறு கடலில் சங்கமிக்கும் காவிரி சங்கமத்திலும், மயிலாடுதுறை காவிரி துலா கட்டத்திலும் ஏராளமான பொது மக்கள் முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து புனித நீராடி வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த பூம்புகாரில் காவிரி ஆறு கடலில் கலக்குமிடம் சங்க முக தீர்த்தம் என்று அழைக்கப்படுகிறது. காவிரி சங்கமத்தில் பொதுமக்கள் புனித நீராடுவது வழக்கம். ஆடி மற்றும் தை அமாவாசை, மஹாலயா அமாவாசை ஆகிய தினத்தன்று காவிரி சங்கமத்தில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதனால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என்பது மக்களின் நம்பிக்கையாகும்.

ஆடி அமாவாசையை முன்னிட்டு காவிரி சங்கமத்தில் குவிந்த மக்கள்

அதன்படி ஆடி அமாவாசையான இன்று (ஆகஸ்ட் 16) பூம்புகார் காவிரி சங்கமத்தில் தமிழகம் மட்டுமின்றி, பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரகணக்கான பொதுமக்கள் பூம்புகார் காவிரி சங்கமத்தில் குவிந்து உள்ளனர். முன்னோர்களுக்கு பலிகர்ம பூஜைகள் செய்து காய்கறிகள், கீரை வகைகள், பச்சரிசி, எள் ஆகியவை வைத்து தர்ப்பணம் கொடுத்து காவிரி சங்கமத்தில் புனித நீராடி வருகின்றனர்.

இதையும் படிங்க: "ரூ.1 கோடி மதிப்பீட்டில் சாரணியர் தலைமையகம் புதுப்பிக்கப்படும்" - பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் அறிவொளி தகவல்!

பொதுமக்கள் வசதிக்காக சீர்காழி, மயிலாடுதுறை, பொறையார் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. காவிரியில் நீர் பரப்பில்லாததால் ஆபத்தான முறையில் கடலில் குளித்து வருகின்றனர். பூம்புகார் காவல் துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோல், மயிலாடுதுறையில் காவிரி ஆறு ஓடுகின்றது.

காசிக்கு நிகராக காவிரி துலாக்கட்டம் திகழ்கிறது. இங்கு 16 தீர்த்த கிணறுகள் உள்ளன. சிறப்பு வாய்ந்த இந்த காவிரி துலாக்கட்டத்தில் ஆடி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பொது மக்கள் தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வருகின்றனர். காவிரியில் சீரான நீரோட்டம் காணப்படுவதால் பக்தர்களின் வருகை கூடுதலாக உள்ளது.

இதையும் படிங்க: "நாங்குநேரி விவகாரத்தில் மவுன விரதம், நீட் விவகாரத்தில் அரசியல்" - அண்ணாமலை அட்டாக்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.