ETV Bharat / state

சீர்காழியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல்வீச்சு கலவரம்!

author img

By

Published : Dec 30, 2019, 11:21 AM IST

protest
protest

நாகப்பட்டினம்: சீர்காழியில் வாக்குப்பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல் வீச்சு நடைபெற்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தமிழ்நாட்டில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இதில் டிசம்பர் 27ஆம் தேதி முதல் கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் முடிந்தது. சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சுமார் ஒரு லட்சம் வாக்காளர்கள் சீர்காழி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்தும் மொத்தம் சுமார் 192 வாக்குச்சாவடிகளாகும். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது.

சீர்காழியில் எதிர்க்கட்சியினர் போராட்டம்

அதன்பிறகு வாக்குப்பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துவரப்பட்ட வாக்குப் பெட்டிகளை அலுவலர்கள் சீர்காழியில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைத்தனர். வாக்குப்பெட்டியை பாதுகாக்க துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு பெட்டிகளை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கும் போது திமுகவினர் அங்கே இல்லை என்று அதிமுகவினரை மட்டுமே வைத்து சீல் வைத்ததாக குற்றம்சாட்டினர். மேலும் சீர்காழியை அடுத்த காவேரிபூம்பட்டினம், வாணகிரி கிராமத்தின் வாக்குப் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சீட்டுகள் கிழிக்கப்பட்டு, வாக்குப்பெட்டியை அதிமுகவினர் மாற்றி விட்டதாக தர்ணா போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனாவிடம், திமுகவினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது கூச்சலும் வாக்குவாதம் ஏற்பட்டு கலவரமானது. திடீரென்று உள்ளே ஆட்கள் இருப்பதாகக் கூறி கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள் மீது கல் வீசி உடைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த பரபரப்பான சூழலில் காவல்துறையினர் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: 'சீட்டுல சின்னத்த காணோம்...' - மறு தேர்தலுக்கு வாய்ப்பு!

Intro:சீர்காழி வாக்கு பெட்டி வைக்கப்பட்டுள்ள கல்லூரியில் கல் வீச்சு கலவரம் போலீஸ் குவிப்பு பரபரப்பு:-Body:தமிழகத்தில் 2 கட்டமாக உள்ளாட்சி தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் முதல் கட்டமாக நாகை மாவட்டம் சீர்காழியில் தேர்தல் நடைபெற்றது. சீர்காழி ஊராட்சி ஒன்றியங்களை சேர்ந்த சுமார் 1 லட்சம் வாக்காளர்கள் சீர்காழி ஒன்றியத்தில் 37 பஞ்சாயத்தும் மொத்தம் சுமார் 192 வாக்குச்சாவடிகள் ஆகும். வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு முடிவடைந்தது அதன் பிறகு வாக்குப்பெட்டிகள் உரிய பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையத்திற்கு கொண்டுவரப்பட்டது. வாக்கு எண்ணும் மையத்திற்கு எடுத்துவரப்பட்ட வாக்குப் பெட்டிகளை அதிகாரிகள் சீர்காழியில் உள்ள விவேகானந்தா மகளிர் கல்லூரியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது துப்பாக்கி ஏந்திய காவலர்கள் பணியில் ஈடுபட்டனர் இன்று காலை 11 மணி அளவில் பெட்டிகளை பாதுகாப்பான அறையில் வைத்து சீல் வைக்கும் போது திமுகவினர் அங்கே இல்லை என்று அதிமுகவினரை மட்டுமே வைத்து சீல் வைத்ததாக குற்றம்சாட்டினர் மேலும் சீர்காழியை அடுத்த காவேரிபூம்பட்டினம்,வாணகிரி கிராமத்தின் வாக்குப் பெட்டியில் ஒட்டப்பட்டிருந்த சீட்டுகள் கிழித்து கல்லூரி வாசலில் வீசப்பட்டு இருந்ததை எடுத்துக்கொண்டு பெட்டியை அதிமுகவினர் மாற்றி விட்டதாக தர்ணா போராட்டத்தில் திமுகவினர் ஈடுபட்டனர் அப்போது அங்கு வந்த சீர்காழி டிஎஸ்பி வந்தனாவிடம் திமுகவினரும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர் அப்போது கூச்சலும் வாக்குவாதம் ஏற்பட்டு கலவரம் ஆனது திடீரென்று உள்ளே ஆட்கள் இருப்பதாக கூறி அங்கிருந்தவர்கள் கல்லூரியின் பின்புறம் ஓடினார்கள் கல்லூரி ஜன்னல் கண்ணாடிகள் கல் வீசி உடைக்கப்பட்டது இதனால் அங்கு பரபரப்பு நிலவுகிறது போலீஸ் அதிகளவில் குவிக்கப்பட்டுள்ளனர்Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.