ETV Bharat / state

மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள் சாலை மறியல்: 41 பேர் கைது!

author img

By

Published : Feb 2, 2021, 7:11 PM IST

அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 41 பேர் கைது  மயிலாடுதுறையில் அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்  அரசு ஊழியர்கள் சாலை மறியல் போராட்டம்  ஜாக்டோஜியோ  Jactogio  Government employees road blockade protest  Government employees protest in Mayiladuthurai  41 civil servants arrested in Mayiladuthurai
Government employees protest in Mayiladuthurai

மயிலாடுதுறை: சாலை மறியலில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள் சங்கத்தினர் 12 பெண்கள் உள்பட 41 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஜாக்டோஜியோ போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் மாநில தலைவர் சுப்ரமணியன் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டதை கண்டித்தும், புதிய ஓய்வுதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதியத்தை அமல்படுத்த வேண்டும்.

சத்துணவு, அங்கன்வாடி, வருவாய்கிராம உதவியாளர், செவிலியர்கள், ஊர்புற நூலகர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு ஊழியர் சங்கத்தினர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இந்த மறியலில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட துணை செயலாளர் கலா தலைமையில் 50-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் கலந்து கொண்டனர். இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட 12 பெண்கள் உள்பட 41 பேரை காவல் துறையினர் கைது செய்து தனியார் திருமணமண்டபத்தில் அடைத்தனர்.

இதையும் படிங்க: அரசு ஊழியர்கள் வீட்டின் பூட்டை உடைத்து 20 சவரன் நகை கொள்ளை!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.