ETV Bharat / state

புதுச்சேரியிலிருந்து மது கடத்திய பெண்கள் உட்பட 183பேர் கைது

author img

By

Published : Sep 23, 2019, 8:30 PM IST

மது பாட்டில்கள்

நாகை: காரைக்காலில் இருந்து ஒரு வார காலத்தில் மது கடத்தியதாக 21 பெண் உட்பட 183 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.

நாகை மாவட்டத்திற்கு அருகாமையில் உள்ள புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் இருந்து மது கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது. இந்நிலையில் இதனை தடுக்கும் விதமாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில், மதுவிலக்கு அமலாக்கப் பிரிவினர் தனிப்படை அமைத்து சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த தனிப்படையினர் கடந்த ஒருவார காலத்தில் மாவட்டம் முழுவதும் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 162 ஆண், 21 பெண் என 183 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் இந்த சோதனையில் 14,293 லிட்டர் சாராயமும், 34,560 லிட்டர் மது, 19 இருசக்கர வாகனம் உள்ளிட்டவைகளை பறிமுதல் செய்துள்ளனர்.

Intro:கடந்த ஒரு வார காலத்தில் நாகை மாவட்டத்தில் மது கடத்தல் தொடர்பாக 21 பெண் உட்பட 183 கைது.Body:கடந்த ஒரு வார காலத்தில் நாகை மாவட்டத்தில் மது கடத்தல் தொடர்பாக 21 பெண் உட்பட 183 கைது.

நாகை மாவட்டத்திற்கு அருகாமையில் அமைந்துள்ள புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகை மாவட்டத்திற்கு மது கடத்தல் என்பது தொடர்கதையாக இருந்து வருகிறது இந்த நிலையில் அதனை தடுக்கும் பொருட்டு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜசேகரன் உத்தரவின் பேரில் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் புதியதாக (ரோமியோ டீம்) என்ற தனிப்படை அமைக்கப்பட்டு தீவிர மதுவிலக்கு சோதனையில் ஈடுபட்டனர். அதனை அடுத்து கடந்த ஒரு வார காலத்தில் மட்டும்
நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் மொத்தம் 170 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 162 ஆண், 21 பெண் குற்றவாளிகள் என மொத்தம் 183
மதுவிலக்கு குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, மொத்தமாக 14,293 லிட்டர் பாண்டி சாராயமும், 34,560 மி.லி மதுபான பாட்டில்கள் கைப்பற்றி, மதுகடத்திலில் ஈடுப்பட்ட 19 இரு சக்கர வாகனங்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இதனால் மாவட்டத்தில் மதுவிலக்கு குற்றம் குறைந்துள்ளதாக பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.