ETV Bharat / state

அம்பேதகர் மரியாதை சர்ச்சை: 5 நாட்களுக்கு 144 தடை

author img

By

Published : Dec 6, 2022, 10:57 AM IST

மயிலாடுதுறை அருகே அம்பேதகருக்கு மரியாதை செலுத்துவது தொடர்பான விவகாரத்தில் பட்டவர்த்தியில் 5 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அம்பேதகர் மரியாதை சர்ச்சை: 5 நாட்களுக்கு 144 (3) உத்தரவு
அம்பேதகர் மரியாதை சர்ச்சை: 5 நாட்களுக்கு 144 (3) உத்தரவு

மயிலாடுதுறையை அடுத்த பட்டவர்த்தியில், கடந்த ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தில், அம்பேத்கர் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்வது தொடர்பாக இரு சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் விடுதலை சிறுத்தைகள் கட்சி முன்னாள் மாவட்டச் செயலாளர் ஈழவளவன் தலைமையில் அம்பேத்கர் படத்துக்கு மரியாதை செய்தபோது ஏற்பட்டது.

அப்போது இரண்டு சமூகத்தினர்களும் மாறி மாறி கற்களை வீசி தாக்கினர். பின்னர் காவல்துறையினரின் நடவடிக்கையால் அனைவரும் கலைந்து சென்றனர். இந்த நிலையில் இன்று (டிச.6) அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி, அவரது திருவுருவப்படத்தை வைத்து அஞ்சலி செலுத்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அனுமதி கேட்டிருந்தனர்.

அதேபோல் அப்பகுதியில் மூவேந்தர் முன்னேற்றக் கழகம் சார்பில், அதே பகுதியில் கட்சி அலுவலகம் திறப்பு மற்றும் படத் திறப்பிற்கு அனுமதி கோரினர். இதனால் அப்பகுதியில் மீண்டும் பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக கருதிய கோட்டாட்சியர் யுரேகா, மதகடி பகுதியிலிருந்து சுமார் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்கு 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவை பிறப்பித்துள்ளார்.

அம்பேதகருக்கு மரியாதை செலுத்துவது தொடர்பான சர்ச்சைக்காக 5 நாட்களுக்கு 144 (3) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது

இதன்படி நேற்று (டிச.5) இரவு 10 மணி முதல் வரும் 10ஆம் தேதி நள்ளிரவு 12 மணி வரை 144 (3) தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அங்கு ஆம்புலன்ஸ் வாகனம் நிறுத்தப்பட்டுள்ளது. தொடர்ந்து மக்கள் நடமாட்டத்தை தடுக்க அப்பகுதியில் உள்ள இரண்டு டாஸ்மாக் கடைகளுக்கும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் கோட்டாட்சியரின் தடை உத்தரவு பேனரில் ஆங்காங்கே ஒட்டப்பட்டுள்ளது. அப்பகுதியைச் சுற்றிலும் நான்கு இடங்களில் சோதனைச் சாவடிகள் அமைத்தும், 21 இடங்களில் பாதுகாப்பு பணியிலும் ஏராளமான காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

இதையும் படிங்க: பாபர் மசூதி இடிப்பு தினம்: கன்னியாகுமரி மாவட்டத்தில் பலத்த பாதுகாப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.