ETV Bharat / state

நீட் தேர்வு: பொது மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடி பழனிசாமி சவால்

author img

By

Published : Feb 11, 2022, 5:47 PM IST

நீட் தேர்வு தொடர்பாக பொதுமேடையில் விவாதிக்க தயார் என முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி சவால் விடுத்துள்ளார்.

நீட் தேர்வு: பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள் விவாதம் செய்ய நானும், ஓபிஎஸ் தயார் - எடப்பாடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால்
நீட் தேர்வு: பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள் விவாதம் செய்ய நானும், ஓபிஎஸ் தயார் - எடப்பாடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால்

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம் மதுரை புதூரில் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சி தலைவரும் அதிமுக இணை- ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜூ, ஆர்.பி. உதயகுமார், திருப்பரங்குன்றம் எம்எல்ஏ ராஜன் செல்லப்பா ஆகியோர் பங்கேற்று உரையாற்றினார்.

இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு எடப்பாடி பழனிசாமி பேசும் போது, " மதுரை நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்கை அளித்து வெற்றிபெற வைக்க வேண்டும்.

மதுரை என்று சொன்னாலே எம்ஜிஆர்

உள்ளாட்சி அமைப்பு, மக்களுக்குச் சேவை செய்யும் அமைப்பு. உள்ளாட்சியில் பெரும்பான்மையான இடம் கிடைக்கும் போது மேயராக வாய்ப்பு கிடைக்கும். மதுரை மாநகராட்சி மூலமாக, குடிநீர், சாலை, குப்பை அகற்றுதல் உள்ளிட்ட பொறுப்பு மாமன்ற உறுப்பினர்களுக்கு உள்ளது. இதை நிறைவேற்ற வேண்டுமானால் வெற்றி பெற வேண்டும்.

மதுரை மாநகராட்சியில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி  பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்
மதுரை மாநகராட்சியில் சட்டமன்ற எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

மக்களுக்குச் சேவை செய்ய வேண்டும் என ஜெயலலிதாவும், எம்.ஜி.ஆரும் வாழ்ந்தவர்கள். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா காலத்தில் இருந்தே மதுரை அதிமுகவின் கோட்டை. 1978 ஆம் ஆண்டும் மதுரையை எம்.ஜி.ஆர் மாநகராட்சியாக மாற்றினார். அதனைத் தொடர்ந்து கடந்த 44 ஆண்டுக்காலத்தில் பல நன்மைகள் திட்டங்களை மதுரைக்கு செய்து உள்ளோம்.

எடப்பாடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால்
முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால்

பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள்

திமுக மதுரைக்கு ஏதும் செய்யவில்லை. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்றைய தினம் ஓர் சவால் விட்டார்! உங்களுடைய சவாலை நாங்கள் ஏற்கிறோம். நீட் தேர்வு என்ற நச்சு விதை யார் ஆட்சியில் விதைக்கப்பட்டது. நீட் தேர்வு பற்றி விவாதம் செய்ய பொது மேடையை ஏற்பாடு செய்யுங்கள் நாங்கள் வருகிறோம். மக்கள் தீர்மானிக்கட்டும் எது உண்மையென்று என்றார்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்

நோபல் பரிசு

திமுக ஆட்சி வந்தவுடன் நீட் தேர்வு ரத்து என கூறினீர்கள். ஆனால், ஆட்சிக்கு வந்து 9 மாதம் கடந்த நிலையில் நீட் தேர்வு ரத்து செய்யப்படவில்லை.
பொய் பேசுவதற்கான நோபல் பரிசை முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கு கொடுக்கலாம். தேர்தல் சமயத்தில் நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் இருப்பதாக உதயநிதி ஸ்டாலின் கூறினார்.

தற்போது தொடர்ந்து மத்தியில் பேசி நீட் தேர்வை ரத்து செய்வோம் என்கிறார். தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்வதுதான் உங்கள் ரகசியமா?? பிளேட்டை மாற்றும் வேலையை திமுகவினர் செய்து வருகின்றனர். மத்திய அரசைத் தொடர்ந்து வலியுறுத்தி நீட் தேர்வை ரத்து செய்யலாம் என்ற ரகசியத்தை கண்டுபிடித்து வெளியிட்ட உதயநிதி ஸ்டாலினுக்கு டாக்டர் பட்டமே அளிக்கலாம்.

மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்
மதுரை மாநகராட்சியில் உள்ள 100 வார்டுகளில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களின் அறிமுக கூட்டம்

மீண்டும் நீட் தேர்வு

தேர்தலின் போது மட்டுமே இவர்கள் சவால் விடுகின்றனர். தேர்தலுடன் திமுகவின் சாவல் முடிந்துவிடும்.முதலமைச்சர் நீட் குறித்து பொய்யை பரப்புகிறார்.

2010ல் நீட் கொண்டு வந்தது திமுக என மு.க.ஸ்டாலின் ஒப்புக்கொண்டுள்ளார். நீட் என்ற நச்சு விதையை தமிழ்நாட்டில் ஊன்றியது காங்கிரஸ், திமுக. அதன் பின் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த பின் நீட் தேர்வை தடுக்க பல வழக்குகளை தொடர்ந்தோம். உச்சநீதிமன்ற நீதிபதிகள் நீட் ரத்து என கூறினார்கள்.

மநீட் தேர்வு: பொது மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடி பழனிசாமி சவால்

ஆனால், காங்கிரஸ் கட்சி அதனை எதிர்த்து மறுசீராய்வு மனு தாக்கல் செய்தது. அதனால் தான் நீட் மீண்டும் வந்தது.

நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர்

மதுரை மாநகராட்சியில் அதிமுக வேட்பாளர்கள் 100 இடங்களில் போட்டியிடுகின்றனர். அனைத்திலும் வெற்றிபெற வேண்டும். 70% அறிவிப்பு நிறைவேற்றி விட்டதாக திமுக பச்சைப் பொய் சொல்கிறது. அப்படியென்றால் 400 வாக்குறுதிகளை நிறைவேற்றியதா என கேள்வி எழுப்பினார்.

நீட் தேர்வு: பொது மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடி பழனிசாமி சவால்
நீட் தேர்வு: பொது மேடையில் விவாதிக்க தயார் - எடப்பாடி பழனிசாமி சவால்

இந்தியாவிலேயே சூப்பர் முதலமைச்சர் என தன்னை சொல்லிக் கொள்ளும் ஸ்டாலின், பொய் சொல்வதில் தான் முதலர்வர்களுக்கெல்லாம் முதல்வர். நாம் பெற்ற பிள்ளைக்கு அவர் பெயர் வைக்கிறார்.

திட்டம்

திமுக உள்ளாட்சித் தேர்தலில் என்ன சொல்ல முடியும். ஊழல், கொள்ளையடித்தை சொல்லித்தான் ஓட்டு கேட்க வேண்டும். அதிமுகவிற்கு பொய் சொல்லி ஆட்சிக்கு வர வேண்டுமென்ற அவசியம் இல்லை.

திமுகவில் கருணாநிதி, அவருக்குப் பின் அவரது மகன் மு.க ஸ்டாலின் தற்போது முதலமைச்சர் ஆகி இருக்கிறார். தற்போது அவரின் மகன் வந்துள்ளார்.

நீட் தேர்வு ஸ்ர,,, எடப்பாடி முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சவால்

எந்த அமைச்சரும் தலைமைச் செயலகத்தில் இல்லை. எறியும் வீட்டில் பிடுங்குவது மிச்சம் என்பது போல அனைத்து அமைச்சரும் அவரவர் துறையில் ஊழல் செய்து கொள்ளையடிக்கத் திட்டமிட்டு வருவதாக குற்றம்சாட்டினார்.

'தற்போது சட்டப்பேரவைத் தேர்தல் வந்தால் அதிமுகதான் வெல்லும்!'

நேசக்கரம் நீட்டிய அதிமுக அரசு

கரோனா மக்கள் துன்பத்தைக் களைந்த அரசு அதிமுக அரசு. வேட்டி நழுவும் போது அதை எப்படிச் சரி செய்வோமோ அதுபோல மக்கள் சிரமப்படும் போது நேசக் கரம் நீட்டும் அரசு அதிமுக அரசு. திமுக கொடுத்துப் பழக்கப்பட்ட கட்சியல்ல, எடுத்துப் பழக்கப்பட்ட கட்சி. அதிமுகதான் கொடுத்துப் பழக்கப்பட்ட கட்சி.

இந்தியாவிலேயே இலவச உணவு வழங்கிய அரசு தமிழ்நாடு அரசுதான். திமுக அரசு தை பொங்கலுக்கு வழங்கிய பொருட்கள் தரமில்லை, பொங்கல் வைக்க வெல்லம் கொடுக்கவில்லை வெள்ளத்தைக் கொடுத்துவிட்டார்.

நிதி அமைச்சர்

தமிழ்நாடு நிதி அமைச்சர் திறமையானவர், பெட்ரோல் டீசல் விலை மத்திய அரசுதான் குறைக்க வேண்டும் என்றார். தற்போது, மத்திய அரசும் பெட்ரோல், டீசல் விலையைக் குறைத்தது. ஆனால் மாநில அரசான திமுக அரசு இதுவரை குறைக்கவில்லை. இதனால் தமிழ்நாட்டில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்ந்து உள்ளது.

கூட்டுறவு கடன்

13 லட்சம் பேருக்கு மட்டுமே கூட்டுறவு வங்கியில் கடன் ரத்து செய்யப்பட்டு உள்ளது. 35 லட்சம் பேருக்கு ரத்து இல்லை. அவர்கள் மாதம் மாதம் வட்டி கட்ட வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டார்கள்.

ஒருவரை ஏமாற்ற வேண்டுமானால் அவரின் ஆசையை தூண்ட வேண்டும் என திரைப்படத்தில் வசனம் வரும். அது போல திமுக செய்துள்ளது. கட்சிக்காரர்களை நம்பி ஸ்டாலின் அரசு நடக்கவில்லை, ஏஜென்டை நம்பி நடத்துகிறார். அதிமுகவைச் சேர்ந்தவர் மதுரை மேயராக வரவேண்டும். எனவே அதிமுக வேட்பாளர்களுக்கு வாக்களியுங்கள் என கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: நீட் விலக்கு ஏற்படும் வரையில் சட்டப்போராட்டம் தொடரும் - கடலூரில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.