ETV Bharat / state

நீட் விலக்கு ஏற்படும் வரையில் சட்டப்போராட்டம் தொடரும் - கடலூரில் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை

author img

By

Published : Feb 11, 2022, 12:54 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் கடலூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டும் தேர்தல் பரப்புரையில், திமுகவின் இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ஈடுபட்டார்.

நீட் விலக்கு ஏற்படும் வரையில் சட்டப்போராட்டம் தொடரும்
நீட் விலக்கு ஏற்படும் வரையில் சட்டப்போராட்டம் தொடரும்

கடலூர்: சிதம்பரத்தில் பரப்புரையைத் தொடங்கியவர் கடலூர் பேருந்து நிலையம் மற்றும் மஞ்சக்குப்பத்தில் மாநகராட்சியின் 45 வேட்பாளர்களையும் ஆதரித்து பரப்புரையில் ஈடுபட்டார்.

அப்போது அவர் பேசியதாவது, ’எடப்பாடி பழனிசாமி தனது தேர்தல் பரப்புரையில் நீட் ரகசியத்தைக் கூறுவதாக கூறிய உதயநிதியை காணவில்லை என்று கூறி வருகிறார். நீட் ஒழிப்பிற்கான ரகசியமே பாஜகவிற்கு அடிமையாக இல்லாமல் இருப்பது தான்.

இதனைக் கூட அவரால் தெரிந்துகொள்ள முடியவில்லை. ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தவரையில், தமிழ்நாட்டில் நீட் தேர்வு வரவில்லை. நீட் விவகாரத்தில் அதிமுக செய்தது மிகப்பெரிய அயோக்கியத்தனம். குடியரசுத்தலைவரால் திருப்பி அனுப்பப்பட்ட மசோதா குறித்து ஓராண்டாக அறிவிக்காமல் இருந்தார்கள். நீட் தேர்வினால் தமிழ்நாட்டில் 14 பேர் இறந்துள்ளனர்.

இனியும் இது தொடரக்கூடாது. நீட் விலக்கு ஏற்படும் வரையில் எங்களது சட்டப்போராட்டம் தொடரும். ராகுல்காந்தி மக்களவையில் பேசும் போது திமுக இருக்கும் வரையில் தமிழ்நாட்டில் பாஜகவால் கால் வைக்க முடியாது என்று கூறினார்.

நீட் விலக்கு ஏற்படும் வரையில் சட்டப்போராட்டம் தொடரும்

பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் திமுக சிம்மசொப்பனமாக விளங்கி வருகிறது. தமிழ்நாடு மக்களுக்கு ஏதாவது ஒரு பிரச்னை என்றால் முன்னால் வந்து நிற்போம்.

வேளாண்மைக்குத் தனி நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்த பெருமை வேளாண்மைத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை சேரும். தமிழ்நாட்டிற்கு ரூ.5 லட்சம் கோடி கடனாக இருந்த நிலையிலும் கரோனா நிவாரண நிதியாக குடும்ப அட்டைக்கு தலா ரூ.4 ஆயிரம் வழங்கினோம்.

மகளிருக்கு இலவசப் பேருந்து பயணம், பெட்ரோல், டீசல், ஆவின் பால் விலையைக் குறைத்துள்ளோம். மேலும், 4 ஆண்டுகள் பதவிக்காலம் இருப்பதால் அறிவித்த பல திட்டங்களையும் தொடர்வோம்.

எனவே, நல்லாட்சியின் சாதனை உள்ளாட்சியிலும் தொடர திமுக மற்றும் கூட்டணிக் கட்சியினரை ஆதரிக்க வேண்டும்' என்றார்.

தொடர்ந்து, பண்ருட்டி நகராட்சியில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து பண்ருட்டியில் பிரசாரத்தில் ஈடுபட்டார்.

இதையும் படிங்க: மயிலாடுதுறை திடீர் மழையால் அச்சத்தில் விவசாயிகள்!

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.