மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா

author img

By

Published : Jun 4, 2022, 9:15 AM IST

Madurai Meenakshi Temple Vaikasi Spring Festival மதுரை மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவம் - புது மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனும் சுவாமியும்

உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா நடந்தது. அம்மனும் சுவாமியும் புதுமண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

மதுரை: மீனாட்சியம்மன் கோயில் வைகாசி வசந்த உற்சவ திருவிழா கிழக்கு ராஜ கோபுரம் எதிரே இருக்கக்கூடிய 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த புதுமண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி நேற்று (ஜூன் 3) நடந்தது. புதுமண்டபத்தில் மூன்று முறை மீனாட்சி அம்மனும், சுவாமியும் பிரியாவிடை அம்மனுடன் எழுந்தருளி வலம் வந்து அதன் பின் மைய மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்ட மேடையில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

அதனைத் தொடர்ந்து விசேஷ ஆராதனைகளும் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். பின்னர் மீனாட்சியம்மனும், சுந்தரேஸ்வரரும் சித்திரை வீதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த பிறகு மீண்டும் கோயிலுக்குச் சென்றனர்.

மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் - புது மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனும் சுவாமியும்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலில் வைகாசி வசந்த உற்சவம் - புது மண்டபத்தில் எழுந்தருளிய அம்மனும் சுவாமியும்

ஆண்டுதோறும் எளிமையான முறையில் நடைபெற்று வந்த வைகாசி வசந்த விழா இந்தாண்டு புது மண்டபத்தில் இருந்த கடைகள் அகற்றப்பட்டு பிறகு கோலாகலமாக நடைபெற்றது. பல ஆண்டுகளுக்குப் பிறகு மதுரை புது மண்டபத்தில் வைகாசி வசந்த உற்சவம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

புது மண்டபத்தில் வைகாசி வசந்த உற்சவம்
புது மண்டபத்தில் வைகாசி வசந்த உற்சவம்

இதையும் படிங்க: மதுரையில் மாலைக்கோவில் கண்டுபிடிப்பு..! 17ஆம் நூற்றாண்டை சேர்ந்தது என ஆய்வாளர்கள் தகவல்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.