ETV Bharat / state

"பாஜகவை விட்டு விலகினால் அதிமுக 'இரட்டை இலை' கிடைக்காது" - டிடிவி தினகரன் விடுத்த எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 2, 2023, 5:48 PM IST

Etv Bharat
Etv Bharat

TTV Dhinakaran:பாஜக-அதிமுக கூட்டணி முறிவால் நெல்லிக்காய் மூட்டையைப் போல, அதிமுக உடைந்துவிடும் எனவும் இதனால், அதிமுகவின் 'இரட்டை இலை சின்னம்' காணாமல் போவதோடு, ஈபிஎஸ் தன் மீது கொள்ளிக்கட்டையை வைத்தது போல ஆகிவிடும் எனவும் அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

டிடிவி தினகரன் செய்தியாளர்கள் சந்திப்பு

மதுரை: பாஜகவை விட்டு விலகினால் எடப்பாடி பழனிசாமியின் அதிமுக சின்னாபின்னமாவதோடு, பழனிசாமி தன் மீது கொள்ளிக்கட்டையை வைத்தது போல ஆகிவிடும் எனவும், இதற்கான தண்டனையை பழனிசாமி அனுபவிப்பார் எனவும் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.

மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் விடுதியில் காந்தி ஜெயந்தியை (Gandhi Jayanti) முன்னிட்டு மகாத்மா காந்தியின் திருவுருவப்படத்திற்கும், பெருந்தலைவர் காமராஜர் நினைவு நாளை (Kamaraj Memorial Day) முன்னிட்டு அவரது திருஉருவப்படத்திற்கும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று (அக்.2) மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதனைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், '2014-ல் திமுக தோற்ற போது, மு.க.ஸ்டாலின் ஏன் தனக்கு தானே தண்டனை கொடுத்து கொள்ளவில்லை? தற்போது தேர்தல் வருவதால் மாவட்ட செயலாளர்களுக்கு எச்சரிக்கை விடுக்கிறார். 2019-ல் பாஜகவை காட்டி மதக்கலவரம், இனக்கலவரம் எனக்கூறி ஸ்டாலின் வாக்குகளை பெற்றார். ஆனால், ஸ்டாலின் கூறியது போல, எதுவுமே பாதிப்பு ஏற்படவில்லை. ஜெயலலிதாவின் பெயரை சொல்லி பிழைப்பு நடத்தினார்கள். எடப்பாடி அதிமுகவினர் அம்மாவின் படத்தை கட்சி நிகழ்ச்சிகளில் விளம்பரப் பலகையில் போடாமல் விட்டுள்ளனர்.

அதிமுக ஆட்சியில் இல்லாமல் 2017-ல் பாஜக உதவியால் தான் எடப்பாடி பழனிசாமி ஆட்சி நடத்தினார். அமமுகவுக்கு ஏற்படும் பின்னடைவுகளை நான் பின்னடைவாகவே பார்க்கவில்லை. ஒரு அனுபவமாகத்தான் எடுத்து கொண்டுள்ளேன்' என்று தெரிவித்தார்.

பாஜக-அதிமுக கூட்டணி முறிவு; தண்டனை கிடைக்கும்: 'பாஜகவை விட்டு விலகினால், எடப்பாடி பழனிசாமியின் அதிமுக சின்னாபின்னம் ஆவதோடு (AIADMK break BJP Alliance), பழனிசாமி தன் மீது கொள்ளிக்கட்டையை வைத்தது போல ஆகிவிடும். பாஜகவை விட்டு விலகியதற்கான தண்டனையை பழனிசாமி அனுபவிப்பார்' என விமர்சித்துள்ளார். 'சசிகலா யாருக்கும் பயந்து வீட்டிற்குள் இருப்பவர் இல்லை என தெரிவித்த அவர், சசிகலா சட்ட நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக' கூறினார்.

அதிமுகவின் அடுத்த கூட்டணி?; இரட்டை இலை காணாமல் போகும்: தொடர்ந்து பேசிய அவர், 'அதிமுகவில் இன்றும் எங்கள் ஸ்லீப்பர் செல்கள் உள்ளனர். அவர்கள் தேவையான நேரத்தில் தேவையான தகவல்களை தருவார்கள். பாஜகவை விட்டு வெளியே வந்த பழனிசாமி மெகா கூட்டணி யாரோடு அமைக்கப் போகிறார். இரட்டை இலை முடக்கமாக வாய்ப்புள்ளது. அதிமுக வருங்காலத்தில் நெல்லிக்காய் மூட்டை போல சிதற போகிறது என்றார்.

பேரறிஞர் அண்ணா, ஜெயலலிதா ஆகிய தலைவர்கள் குறித்து உண்மைக்குப் புறம்பான தகவல்களை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேசியதாக, அதிருப்தி தெரிவித்த அதிமுகவினர், தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகுவதாக அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் அறிவித்தது. இந்த விவகாரம் தற்போது தமிழ்நாடு அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ள நிலையில், பாஜக தலைமையில் அண்ணாமலை அவரின் பதவியிலிருந்து மாற்றுவது குறித்து அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் டெல்லி சென்று பேசியதாக கூறப்படுகிறது.

இதற்கு மத்தியிலும் ஆளும் பாஜக செவி சாய்க்காத நிலையில், வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுகவின் துணையின்றி தேர்தல் பரப்புரை செய்வது, சென்னையில் பாஜக மாநாடு ஒன்றை நடத்துவது என்பன உள்ளிட்ட பல தகவல்கள் குறித்து ஆலோசனை செய்வதற்காக அண்ணாமலை டெல்லி சென்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: "அரசியல் பாதை கரடு முரடானது; துன்பங்கள் சூழ்ந்தது" - நெல்லையில் வைகோ பேச்சு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.