ETV Bharat / state

TN Ration Shops: ரேஷன் கடைகளில் 3000 பொருட்கள் விற்பனை - ராதாகிருஷ்ணன் தகவல்

author img

By

Published : Apr 18, 2023, 7:44 AM IST

Etv Bharat
Etv Bharat

தமிழகத்தில் கடந்த ஓராண்டில் கூட்டுறவு வங்கிகள் மூலம் 64 ஆயிரத்து 140 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை முதன்மைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

மதுரை: மதுரை கோச்சடை பகுதியில் உள்ள பாண்டியன் நுகர்வோர் கூட்டுறவு மொத்த விற்பனை பண்டக சாலை வளாகத்தில் பாண்டியன் சில்க்ஸ் & சாரிஸ் புதிய விற்பனை நிலையத்தை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அரசு முதன்மைச் செயலாளர் மருத்துவர் ராதாகிருஷ்ணன் குத்து விளக்கேற்றி திறந்து வைத்து பார்வையிட்டார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகர் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

நிகழ்ச்சிக்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன் கூறியதாவது, "கூட்டுறவு சங்கங்களை பல்நோக்கு சங்கங்களாக மாற்றுவதில் நல்ல பலன் கிடைத்துள்ளது. தமிழகத்தில் 22 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பல்வேறு வகையான கூட்டுறவு சங்கங்கள் செயல்பட்டு வருகின்றன. மக்களின் அனைத்து விதமான தினசரி பயன்பாட்டில் கூட்டுறவு சங்கங்களின் தேவை இருக்கிறது. கூட்டுறவு சங்களின் வைப்பு மட்டும் ரூ.71,955 கோடி உள்ளன. கடந்த ஓர் ஆண்டில் மட்டும் ரூ. 64,140 கோடி கடன் மக்களுக்கு வழங்கப்பட்டு உள்ளன" என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், "இந்த ஆண்டு மார்ச் வரை இலக்கு ரூ.12 ஆயிரம் கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. தற்போது கூட்டுறவு வளர்ச்சியின் அடுத்தக் கட்டமாக மாவட்ட அளவிலான 40 நுகர்வோர் சங்கள் மூலம் கடைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
மதுரையில் புடவைகள் ஏப்ரல் 17 முதல் விற்பனைக்கு வந்துள்ளன. கூட்டுறவு பல் அங்காடியில் நியாயவிலைக் கடையில் சிறுதானியங்கள் விற்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். 2150 புதிய கூட்டுறவு சங்கங்களுக்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.

ரேசன் கடைகளில் உள்ள கைரேகை இயந்திரங்களில் ஏற்படும் கோளாறுகள் விரைவில் புது டெண்டர் எடுக்கப்பட்டவுடன் படிப்படியாக சீராகும். வீடுகளுக்கு நேரடியாக் சென்று பொருட்களை கொடுக்கும் முறை சாத்தியமில்லை. 2.23 கோடி குடும்ப அட்டைகள் இருப்பதால் இதில் பெரிய நடைமுறைச் சிக்கல் இருக்கும் வயதானோருக்கு கண்டறிந்து வழங்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும்" என்று கூறினார்.

குடும்ப அட்டைதாரர்களுக்கு நிம்மதி

மேலும், "புதிதாக கட்டப்படும் ரேசன் கடைகள் கழிப்பறை வசதியுடன் அமைக்கப்படும். ஏற்கனவே இருக்கும் ரேசன் கடைகளுக்கு தேவையான ஏற்பாடுகளை முடிந்தவரை செய்து வருகிறோம். ஓராண்டுக்குள் கழிவறை வசதிகள் செய்து கொடுக்கப்படும். அதேபோல், 3000-க்கும் மேற்பட்ட பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. பொதுமக்களுக்கு இதை எடுத்துச் செல்ல விளம்பரம் அவசியம் அதை முன்னெடுப்போம்.

நியாய விலைக்கடையில் மக்களை கட்டாயப்படுத்தி தேவையில்லாப் பொருட்களை விற்கக் கூடாது. நியாயவிலைக் கடைகளை ஒரே குடையின் கீழ் கொண்டு வரவேண்டுமென்பது கொள்கை ரீதியான முடிவு. அதனை தொடர்ச்சியாக பின்பற்றி வருகிறோம்" இவ்வாறு கூறினார்.

இதையும் படிங்க: தனியார் பள்ளியில் 25% இட ஒதுக்கீட்டில் மாணவர் சேர்க்கை - வரும் 20ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.