ETV Bharat / state

சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின்...நிபந்தனைகள் என்ன?

author img

By

Published : Nov 19, 2022, 10:06 AM IST

Updated : Nov 19, 2022, 10:13 AM IST

Etv Bharat
Etv Bharat

சவுக்கு சங்கருக்கு உச்ச நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ள நிலையில், அது தொடர்பான நிபந்தனைகள் வெளியாகியுள்ளது.

மதுரை : நீதித்துறை பற்றி அவதூறாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கருக்கு 6 மாதம் சிறை தண்டனை விரித்து உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டது. இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சவுக்கு சங்கருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கிய உத்தரவு நிபந்தனைகளை உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வழங்க உத்தரவிட்டுள்ளது. அதில்,

*நீதித்துறை குறித்து எந்த கருத்துக்களையும் சவுக்கு சங்கர் தெரிவிக்கக் கூடாது.

*உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி சமூக வலைதளங்களில் எந்த கருத்துக்களையும் பதிவிட கூடாது.

*நீதிமன்றம் உத்தரவிட்டால் உடனடியாக உயர் நீதிமன்ற மதுரைக்கிளையில் சவுக்கு சங்கர் ஆஜராக வேண்டும்.

*சவுக்கு சங்கர் தினமும் காலை 10:30 மணிக்கு மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும்.

* 20,000 மதிப்புள்ள பத்திரத்தில் இரண்டு நபர்கள் பிணையம் வழங்க வேண்டும்.

உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதித்துறை பதிவாளர் வெங்கடாவரதன் ஜாமின் வழங்குவதற்கான நிபந்தனைகளையும் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : சென்னையில் 4 இடங்களில் போலீஸ் சோதனை

Last Updated :Nov 19, 2022, 10:13 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.