ETV Bharat / state

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு!

author img

By

Published : Nov 3, 2022, 11:04 PM IST

எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு
எர்ணாகுளம்-வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் சேவை நீட்டிப்பு

விருதுநகர் மற்றும் மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே செல்லும் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மதுரை: விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி இடையே செல்லும் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 'விருதுநகர், மானாமதுரை வழியாக எர்ணாகுளம் - வேளாங்கண்ணி ரயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்பட்டு வரும் வாராந்திர சிறப்பு கட்டண ரயிலின் சேவை நவம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டு இருந்தது. தற்போது இந்த ரயிலின் சேவை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்படுகிறது.

அதன்படி, எர்ணாகுளம் - வேளாங்கண்ணி வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06035) எர்ணாகுளத்தில் இருந்து நவம்பர் 19 முதல் டிசம்பர் 31 வரை சனிக்கிழமைகளில் மதியம் 12.35 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 05.45 மணிக்கு வேளாங்கண்ணி சென்று சேரும். மறு மார்க்கத்தில் வேளாங்கண்ணி - எர்ணாகுளம் வாராந்திர சிறப்பு கட்டண ரயில் (06036) வேளாங்கண்ணியில் இருந்து நவம்பர் 20 முதல் ஜனவரி 1வரை ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 06.35 மணிக்கு புறப்பட்டு மறுநாள் மதியம் 12.00 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

இந்த ரயில்கள் கோட்டயம், சங்கணாச்சேரி, திருவல்லா, செங்கனூர், மாவேலிக்கரா, காயங்குளம், கருநாகப்பள்ளி, சாஸ்தான்கோட்டா, கொல்லம், குண்டரா, கொட்டாரக்கரா, அவனீஸ்வரம், புனலூர், தென்மலை, செங்கோட்டை, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில், ராஜபாளையம், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை, மானாமதுரை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, அதிராம்பட்டினம், திருத்துறைப்பூண்டி, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும்’ என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

இதையும் படிங்க: அவனியாபுரம் ஆதிதிராவிடர்களுக்கான சுடுகாட்டுப்பகுதி ஆக்கிரமிப்பு - 8 வாரத்தில் மீட்க உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.