ETV Bharat / state

துப்புரவுப் பணியாளர்களை கண்காணிக்கும் அலுவலர்கள் வழக்கு நிலுவையில் சேர்ப்பு

author img

By

Published : May 29, 2020, 8:07 PM IST

madurai-high-court
madurai-high-courtmadurai-high-court

மதுரை: துப்புரவுப் பணியாளர்களுக்கு கை உறைகள், முகக் கவசங்கள், கிருமி நாசிகள், கரோனா பரிசோதனை உள்ளிட்டவைகளை கண்காணிக்க மாவட்ட அளவில் அலுவலர்களை நியமிக்கக் கோரிய வழக்கை நிலுவையில் உள்ள வழக்குகளுடன் சேர்த்து பட்டியலிட உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

கன்னியாகுமரியைச் சேர்ந்த லூயி துப்புரவு தொழிலாளர்கள் நலச்சங்கத்தின் தலைவர் சுலிப் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அந்த மனுவில் "கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்களைச் சேர்ந்த சுமார் 1000க்கும் மேற்பட்ட துப்புரவுப் பணியாளர்கள் லூயி துப்புரவு தொழிலாளர்கள் நலச்சங்கத்தில் உறுப்பினர்களாக உள்ளனர்.

அவர்கள் அரசு மருத்துவமனை, பேரூராட்சி, பஞ்சாயத்துகளில் பணியாற்றி வருகிறார்கள். பொது இடங்கள், சாலைகளில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்கிறார்கள். அவர்களுக்கு சம்பந்தப்பட்ட அலுவலர்கள் எந்த ஒரு கை உறை, முகக் கவசம், கிருமி நாசினி, சோப் உள்ளிட்டவைகளை முறையாக வழங்குவதில்லை. அதனால் எளிதாக கரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளது.

அதுமட்டுமல்லாமல் கரோனா சிகிச்சை பிரிவில் பணிபுரியம் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் துப்புரவுப் பணியாளர்களுக்கு சரியான முறையில் உணவு, விடுப்பு வழங்காமல் தொடர்ந்து பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் மிகுந்த மனவேதனைக்கு ஆளாகிறார்கள். மத்திய அரசின் வழிகாட்டுதலின் படி, அனைத்து துப்புரவுப் பணியாளர்களுக்கும் ஆயுள் காப்பீட்டு உறுதி செய்ய வேண்டும். அது தொடர்பாக அலுவலர்களுக்கு மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனவே, துப்புரவுப் பணியாளர்களுக்கு முறையான பாதுகாப்புகளான கை உறை, முகக் கவசம், கிருமி நாசினி, சோப் உள்ளிட்டவைகளை வழங்கி, மருத்துவ பரிசோதனை செய்து மாவட்ட அளவில் கண்காணிக்க அலுவலர்களை நியமிக்க உத்தரவிட வேண்டும்" எனக் குறிப்பிட்டிருந்தார். அந்த வழக்கு மீதான விசாரணையில் நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி, இது போன்ற வழக்குகள் ஏற்கனவே நிலுவையில் உள்ளதால், நிலுவையில் உள்ள வழக்குகளுடன் இந்த வழக்கையும் சேர்த்து பட்டியலிட உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: தூக்குத் தண்டனைக் கைதிகளை நேரில் ஆஜர்படுத்த உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.