ETV Bharat / state

திமுக உள்கட்சி பூசலை மறைக்க அதிமுக மீது புகார் - அமைச்சர் ஆர் பி உதயகுமார்

author img

By

Published : Dec 9, 2020, 4:58 PM IST

மதுரை: திமுக தனது உள்கட்சிப் பூசலை மறைக்க அதிமுக மீதும் தமிழ்நாடு அரசின் மீதும் தொடர்ந்து புகார் கூறி வருகிறது என தமிழ்நாடு வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

minister
minister

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட முழுதும் வடகிழக்கு பருவமழையால் பகுதியாக வீடுகள் சேதமடைந்த 59 பேருக்கு வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிதியுதவி வழங்கினார். இந்நிகழ்வில் மதுரை ஆட்சியர் த.அன்பழகன் மற்றும் மாநகராட்சி ஆணையர் விசாகன் ஆகியோர் பங்கேற்றனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "தமிழ்நாடு விவசாயிகள் மூன்று வேளாண் சட்டங்களை ஏற்றுக்கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் பாரத் பந்த் தோல்வியடைந்துவிட்டது. 2016ஆம் ஆண்டு திமுக தேர்தல் அறிக்கையில் வேளாண் சட்டத்தின் சாராம்சத்தை வாக்குறுதியாக கொடுத்துள்ளது.

தமிழ்நாட்டில் 100 விழுக்காடு பயிர் காப்பீடு செய்யப்பட்டுள்ளது. திமுக ஆட்சியில் பயிர் காப்பீடு செய்யப்படவில்லை. பச்சை துண்டு போட்டவர்கள் எல்லாம் விவசாயிகள் கிடையாது, விவசாயிகளை எதிர்க்கட்சிகள் ஏமாற்ற நினைக்கின்றன.

அதிமுக தலைமைக்கு துணையாக இருக்கவே நாங்கள் பணியாற்றி வருகிறோம். திமுகவில் கிளை செயலாளராக கூட இல்லாத உதயநிதி உயர் பதவிக்கு வந்துள்ளார். உதயநிதிக்கு வாழ்த்து சொல்லி விட்டு தான் திமுகவினர் கட்சி பணியை தொடங்குகிறார்கள்.

திமுக உள்கட்சி பூசலை மறைக்கவே முதலமைச்சர் குறித்து அவதூறாக பேசி வருகிறார்கள். திமுகவின் பேச்சால் அதிமுக தொண்டர்கள் கொதிப்படைந்துள்ளனர். ஜெயலலிதா இல்லாத காலத்தில் அவரை அவதூறாக பேசுவதை ஏற்றுக்கொள்ள முடியாது.

திமுக உள்கட்சி பூசலை மறைக்க அதிமுக மீது புகார்

ஜெயலலிதா மீது தொடுக்கப்பட்ட வழக்கு காழ்ப்புணர்ச்சி காரணமாக தொடுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் 2 ஜி வழக்கு நிலுவையில் உள்ளதை ஆ.ராசா ஞாபகம் கொள்ள வேண்டும்.

2 ஜி வழக்கு நிலுவையில் உள்ள பொழுது எப்படி பொது வெளியில் விவாதிக்க முடியும். ஆ.ராசா பொது வெளியில் மிக கவனமாக பேச வேண்டும்" என வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை: பிரபலங்கள் இரங்கல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.