ETV Bharat / state

High Court: தேவகோட்டை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்: நீதிமன்றம் அதிரடி!

author img

By

Published : Apr 29, 2023, 1:48 PM IST

madurai high court
உயர்நீதிமன்றம் மதுரை கிளை

நில ஆக்கிரமிப்பு சட்டப்படி ஆக்கிரமிப்புகளை அகற்றுவதில் விதிமுறைகளை பின்பற்றாத, தேவகோட்டை தாசில்தாருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உயர்நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை பகுதியைச் சேர்ந்த மதியாரி என்பவர் உயர்நீதிமன்றம் மதுரை கிளையில் நில ஆக்கிரமிப்பு தொடர்பாக மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், "தேவகோட்டை பகுதியில் நான் நில ஆக்கிரமிப்பு செய்துள்ளதாக கூறி ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என தேவகோட்டை தாசில்தார் நோட்டீஸ் அனுப்பி உள்ளார். நில ஆக்கிரமிப்பு சட்டபடி உரிய விதிமுறைகளை பின்பற்றி ஆக்கிரமிப்புகளை அகற்ற தேவகோட்டை தாசில்தாருக்கு உத்தரவிட வேண்டும்" என அந்த மனுவில் கூறியிருந்தார்.

அந்த மனுவானது நீதிபதிகள் சுப்பிரமணியன், விக்டோரியா கவுரி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவில், "இனி வரும் காலங்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றால் நில ஆக்கிரமிப்பு சட்டத்தின்படி ஆக்கிரமிப்பாளருக்கு முறைப்படி நோட்டீஸ் வழங்க வேண்டும் அதன் பிறகு ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அதற்கு மாறாக ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டு சேர்ந்து கொண்டு, நில ஆக்கிரமிப்பு சட்டபடி ஆக்கிரமிப்புகளை அகற்ற தாசில்தார்கள் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், இது தொடர்பான வழக்குகள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டால், விதிமுறைகளை பின்பற்றாதா தாசிலர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்தனர்.

மேலும் இந்த வழக்கில் தேவகோட்டை தாசில்தாருக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்றும், தொகையை மதுரையில் உள்ள M.S.செல்லமுத்து மன நல காப்பக மையத்திற்கு செலுத்த வேண்டும்" என்றும் உத்தரவிட்டு வழக்கு விசாரணை ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: குடிநீர் தொட்டியில் மின்சாரம் தாக்கி இளைஞர் பலி.. பேரூராட்சி அலட்சியமே காரணம் என மக்கள் புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.