ETV Bharat / state

“வருமான வரித்துறை சோதனை‌ திமுகவை அச்சுறுத்தும் செயல்” - அமைச்சர் எ.வ.வேலு

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 6, 2023, 8:01 AM IST

வருமான வரித்துறை சோதனை‌ தி.மு.க.வை அச்சுறுத்தும் செயல்
அமைச்சர் எ.வ.வேலு

Minister E.V.Velu: வருமான வரித்துறை சோதனை‌ நடத்துவது தி.மு.கவை அச்சுறுத்தும் செயல் என அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்.

வருமான வரித்துறை சோதனை‌ தி.மு.க.வை அச்சுறுத்தும் செயல்

மதுரை: மதுரையில் நடைபெற்ற புனரமைப்பு பணிகளை பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், "12 கோடி ரூபாய் மதிப்பில், மதுரை திருமலை நாயக்கர் மஹாலில் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. தர்பார் ஹால், பள்ளியறை, நாடக சாலை, நூலகம் ஆகிய பகுதிகள் பழமை மாறாமல் புனரமைப்பு பணிகள் நடைபெறுகின்றன. தளத்திற்கு போடப்படக்கூடிய கற்கள் அனைத்தும் கிருஷ்ணகிரி பகுதியில் இருந்து கொண்டு வரப்படுகிறது.

மேலும், மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள வருமான வரித்துறை சோதனை, மாதம் மாதம், வாரம் வாரம் நடைபெறுகிறது. மத்திய அரசைக் கேட்டால் வருமான வரித்துறை சோதனை எங்களது பணி என்று சொல்வார்கள். எங்களைக் கேட்டால் பழிவாங்கும் நடவடிக்கைகள் என சொல்வோம். நாடாளுமன்றத் தேர்தல் வருவதால் வருமான வரித்துறையினர் சோதனை செய்து வருகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தல் வரக்கூடிய காலகட்டத்தில் வருமான வரித்துறை சோதனையை தவிர்த்து இருக்கலாம்.

இதையும் படிங்க: கள்ளக்குறிச்சியில் மூதாட்டி அடித்துக் கொலை.. காலணியை வைத்து கொலையாளியை கைது செய்த போலீஸ்!

ஜெகத்ரட்சகன் பன்முகம் கொண்டவர். நாடாளுமன்ற உறுப்பினர் மட்டுமல்லாமல் கல்வியாளர், தொழில் அதிபர் ஆவார். பலமுறை இது போன்ற சோதனகளை ஜெகத்ரட்சகன் சந்தித்து இருக்கிறார். மத்திய அரசு தேர்தல் முடிந்தவுடன் சோதனை நடத்தி இருக்கலாம். ஜெகத்ரட்சகன் இங்கேயேதான் இருக்கிறார். எங்கேயும் ஒடிப்போக போவதில்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன் நடைபெறும் வருமான வரித்துறை சோதனை திமுகவை அச்சுறுத்தும் செயலாகத்தான் பார்க்கிறோம்.

மதுரை வைகை ஆற்றங்கரையில் மீதமுள்ள சாலைப் பணிகள் விரைந்து முடிக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதிமுக, ஆட்சியை விட்டுச் செல்லும்போது 6 லட்சத்து 28 ஆயிரம் கோடி ரூபாய் கடனை வைத்து விட்டு போய் விட்டார்கள். ஆண்டுக்கு 48 ஆயிரம் கோடி ரூபாய் தமிழக அரசு வட்டி கட்டி வருகிறது. இப்படிப்பட்ட சூழலிலும், மக்களுக்கு செய்ய வேண்டிய திட்டங்களை முதலமைச்சர் செய்து வருகிறார்.

மேலும், அதிமுக ஆட்சியில் தென் மாவட்ட மக்கள் 10 ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டு உள்ளனர். மதுரை கோரிப்பாளையம் மற்றும் அப்போலா சந்திப்பு மேம்பாலப் பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது. முதல்வர் தென் மாவட்டங்களில், மக்களுக்கான திட்டப்பணிகளை மேற்கொள்ள கவனம் செலுத்தி வருகிறார்" என்று கூறினார்.

இதையும் படிங்க: இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் ஆசிரியர்கள் போராட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.