ETV Bharat / state

கைதியுடன் மது அருந்திய காவலர்கள் 3 பேர் பணியிடை நீக்கம்!

author img

By

Published : Sep 13, 2019, 12:15 PM IST

drunk prisoners suspended in madurai

மதுரை: பிணையில் வெளிவந்த கைதியுடன் சிறைக் காவலர்கள் தனியார் உணவு விடுதியில் மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து மூன்று பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் கைதிகள் சிலரோடு சிறைக்காவலர்கள் நெருக்கமாக இருப்பதால் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார்கள் எழுந்துவருகின்றன.

இந்நிலையில், மதுரை மத்திய சிறையின் உதவி சிறை வார்டன் முனியாண்டி, முதல்நிலை சிறை காவலர்கள் எம்.ஜி. மணி, மூர்த்தி ஆகிய மூவரும் கோச்சடை பகுதியிலுள்ள தனியார் நட்சத்திர விடுதியில் பிணைக்கைதி முத்துகிருஷ்ணனுடன் ஒன்றாக மது அருந்தியதாக சில நாட்களுக்கு முன்பு புகார் எழுந்தது.

இது குறித்து, சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் மூவர் மீதான புகார் நிரூபிக்கப்பட்டது. இதையடுத்து, உதவி சிறை வார்டனையும் சிறைக் காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்ய ஊர்மிளா உத்தரவிட்டுள்ளார்.

இதேபோன்று முறைகேடுகளில் ஈடுபட்டு கைதிகளுக்கு ஆதரவாக செயல்படும் சிறைத் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கைவிடுத்துள்ளனர்.

Intro:Body:கைதியுடன் மது அருந்திய காவலர்கள் - மூன்று பேர் பணியிடை நீக்கம்

ஜாமீனில் வெளிவந்த கைதி ஒருவரோடு சிறைக்காவலர்கள் மூவர் தனியார் உணவு விடுதியில் மது அருந்தியதாக எழுந்த குற்றச்சாட்டை அடுத்து அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மதுரை மத்திய சிறையில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறைவாசிகள் தண்டனை அனுபவித்து வருகின்றனர். இந்நிலையில் சிறைவாசிகள் சிறையில் கஞ்சா உள்ளிட்ட போதைபொருட்கள் பயன்படுத்துவதாக அடிக்கடி புகார் எழும்போது போலிசார் சோதனை நடத்துவது வழக்கம்.

அடிக்கடி சிறைக்கு வந்து செல்லும் சில கைதிகளோடு சிறைக்காவலர்கள் சிலர் நெருக்கமுடன் இருப்பதால் இது போன்ற தவறுகள் ஏற்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் மதுரை மத்திய சிறைச்சாலையின் உதவி சிறை வார்டன் முனியாண்டி, முதல் நிலை சிறை காவலர்கள் எம்ஜி மணி, மூர்த்தி ஆகிய 3பேரும் மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் ஜாமின் கைதி முத்துகிருஷ்ணன் என்பவருடன் மது அருந்தியதாக புகார் எழுந்தது

அது குறித்து சிறை கண்காணிப்பாளர் ஊர்மிளா தலைமையில் விசாரணை நடத்தப்பட்டதில் புகார் நிருபிக்கபட்ட நிலையில் 3பேரையும் பணியிடை நீக்கம் செய்து சிறைக்கண்காணிப்பாளர் உத்தரவிட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதே போன்று முறைகேடுகளில் ஈடுபட்டு கைதிகளுக்கு ஆதரவாக செயல்படும் சிறைத்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.