ETV Bharat / state

'குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக ஸ்டாலின் போராட்டமாவது நடத்தினாரா?'

author img

By

Published : Dec 13, 2019, 7:58 PM IST

மதுரை: குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக 37 எம்பிக்களைக் கொண்ட ஸ்டாலின் நாடாளுமன்றத்தை முடக்காதது ஏன்? என அமைச்சர் செல்லூர் ராஜு கேள்வியெழுப்பியுள்ளார்.

dmk-leader-stalin-why-didnt-protest-for-citizenship-amendment-bill-asks-minister-sellur-raju
minister-sellur-raju

மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் 40 ஆண்டுகளுக்கு பிறகு தண்ணீர் நிரப்பும் பணி நேற்று முதல் நடைபெற்றுவருகிறது. அதனைக் கூட்டுறவுத் துறை அமைச்சர் செல்லூர் ராஜு நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அதைத் தொடர்ந்து செல்லூர் ராஜு பேசுகையில், "தமிழ்நாட்டில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஜெட் வேகத்தில் அனைத்தையும் செயல்படுத்திவருகிறார். இந்தியாவில் தமிழ்நாடு கூட்டுறவுத் துறை சிறப்பாகச் செயல்பட்டுவருகிறது. அதனால் குடியரசுத் தலைவரிடம் விருதும் வாங்கியுள்ளது.

உள்ளாட்சித் தேர்தலில் திமுக வெற்றிபெற முடியாது என்பதால்தான் எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார். உள்ளாட்சித் தேர்தலைப் பொறுத்தவரை தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது, தேர்தலை முழுக்க முழுக்க ஆணையம் மட்டுமே நடத்துகிறது. நாங்கள் உதவி மட்டுமே செய்கிறோம்.

தமிழ்நாட்டில் பல்வேறு பிரச்னைகளுக்காக அதிமுக 48 நாள்கள்வரை நாடாளுமன்றத்தையே முடக்கிவுள்ளது. ஆனால் குடியுரிமை சட்டத்திருத்த மசோதா விவகாரத்தில் 37 எம்பிக்களைக் கொண்ட திமுக நாடாளுமன்றத்தை முடக்கியதா? அல்லது அந்த மசோதாவிற்கு எதிராக ஸ்டாலின் போராட்டமாவது நடத்தினாரா?" என்று கேள்வியெழுப்பியுள்ளார்.

அமைச்சர் செல்லூர் ராஜு பேட்டி

இதையும் படியுங்க: புதுவையில் குடியுரிமைச் சட்டம் இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்

Intro:*பல்வேறு பிரச்சினைகளுக்காக அதிமுக நாடாளுமன்றத்தை முடக்கியது ஆனால்,குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 37 எம்பிக்களை கொண்ட ஸ்டாலின் நாடாளுமன்றத்தை முடக்கினாரா? போராட்டம் நடத்தினாரா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி*Body:*பல்வேறு பிரச்சினைகளுக்காக அதிமுக நாடாளுமன்றத்தை முடக்கியது ஆனால்,குடியுரிமை சட்டத் திருத்த மசோதாவுக்கு எதிராக 37 எம்பிக்களை கொண்ட ஸ்டாலின் நாடாளுமன்றத்தை முடக்கினாரா? போராட்டம் நடத்தினாரா?- அமைச்சர் செல்லூர் ராஜூ பேட்டி*

40 ஆண்டுகளுக்கு பிறகு மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பும் பணி நேற்று முதல் நடைபெற்று வருகிறது, அதனை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு தெப்பக்குளத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்,

தொடர்ந்து பேசுகையில்,

நாங்கள் ஜெட் வேகத்தில் இந்த அரசு சென்று கொண்டுள்ளது. முதல்வரும்,துணை முதல்வரும் அதற்கான நடவடிக்கை எடுத்து வருகின்றனர்,முதல்வர் ஒரு ராசியான முதல்வர்,எல்லா விலைவாசியும் கட்டுக்குள் உள்ளது,கொண்டு வந்த வெங்காயத்தை கேலி கிண்டல் செய்தார்கள், நானும் முதல்வரும் சாப்பிட்டு பார்த்தோம்,வெளிநாட்டு வெங்காயம் நல்ல காரத்தன்மையாக இருந்தது,மக்கள் தான் எஜமானர்கள், நீதிமான்கள்,முதல்வர் மக்களோடு கூட்டணி வைத்துள்ளார்,வெற்றி பெற முடியாது என்பதால் எதிர்க்கட்சித்தலைவரும், மாற்றுக்கட்சியினரும் நினைப்பதால் அதிமுக மக்கள் நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்துவதால் தேர்தலை சந்திக்க திமுக எதிர்க்கட்சிகள் பயப்படுகின்றன,எதிர்க்கட்சியினர் நீதிமன்றத்தை நாடினால் நாங்கள் மக்களைத்தான் நாடி செல்கிறோம்,தேர்தல் ஆணையத்தின் செயல்பாடுகளில் அரசு தலையிடாது,தேர்தலை முழுக்க முழுக்க ஆணையம் மட்டுமே நடத்துகிறது,நாங்கள் அரசு உதவி மட்டுமே செய்கிறோம்,அதிமுக நாடாளுமன்றத்தையே முடக்கினார்கள்,48 நாள் நாடாளுமன்றத்தை முடக்கினோம்,37 எம்பிக்களை கொண்ட ஸ்டாலின் நாடாளுமன்றத்தை முடக்கினாரா? போராட்டம் நடத்தினாரா?,

முருங்கைக்காய் விலை அதிகரித்துள்ளது குறித்த கேள்விக்கு சிரித்துக்கொண்டே சென்றார்.Conclusion:

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.