ETV Bharat / city

புதுவையில் குடியுரிமைச் சட்டம் இல்லை - முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டம்

author img

By

Published : Dec 13, 2019, 7:05 PM IST

சென்னை: மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள குடியுரிமைச் சட்டத்தை புதுச்சேரியில் நடைமுறைப்படுத்த மாட்டோம் என முதலமைச்சர் நாராயணசாமி திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

narayanasamy
narayanasamy


சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, “குடியுரிமைச் சட்டத்தில் வங்கதேசம், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தானிலிருந்து இந்தியாவுக்கு குடிபெயர்ந்த கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை அளிப்பது எனவும் ஆனால் இஸ்லாமியர்களுக்கு குடியுரிமை கிடையாது என்றும் உள்ளது. இது அப்பட்டமாக இஸ்லாமியர்களைப் புறக்கணிக்கும் செயல்.

இதை காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஒருங்கிணைந்து எதிர்த்தும், அதை ஏற்றுக் கொள்ளாத மத்திய அரசு இரண்டு அவைகளிலும் மசோதாவை நிறைவேற்றி ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் மதத்தின் பெயரால் மக்களைப் பிரித்துப் பார்க்கக் கூடாது என்கிறது. ஆனால், மோடி அரசு இந்துத்துவா கொள்கையை நிறைவேற்றுகின்ற வகையில், இஸ்லாமிய மக்களை புறக்கணித்து இச்சட்டத்தை கொண்டுவந்திருக்கிறார்கள்.

பஞ்சாப், கேரளா, வங்கதேச மாநில முதலமைச்சர்கள் அவரவர் மாநிலங்களில் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்த மாட்டோம் என உறுதியாகக் கூறியுள்ளனர். நானும் உறுதியாகக் கூறுகிறேன். மதத்தின் பெயரால் மக்களைப் பிரிக்கும் இச்சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் நடைமுறைப்படுத்த மாட்டோம்.

நாராயணசாமி, முதலமைச்சர், புதுச்சேரி

மத்திய அரசு இந்திய ஜனநாயகத்தை மீறி, இந்திய அரசியல் அமைப்பை மீறி, ஒரே மதம், ஒரே நாடு, ஒரே மொழி என்று நாட்டை பிரித்தாளுகிறது. மதச்சார்பற்ற இந்திய நாட்டில் இதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தச் சட்டத்தை முழுமையாக நாங்கள் புறக்கணிக்கிறோம் “ எனக் கூறினார்.

இதையும் படிங்க: குடியுரிமை சட்டத் திருத்த மசோதா - போராட்டக்களமாக மாறிய பல்கலைக்கழகம்!

Intro:சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டிBody:சென்னை விமான நிலையத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டி

குகுடியுரிமை சட்ட மசோதா பாராளுமன்ற மக்களவையில் கடந்த வாரம் விவாதிக்கப்பட்டு மாநிலங்களவையில் நிறைவேற்றப்பட்டது. அந்த சட்டத்தின் முக்கியமான அம்சங்கள் பங்களாதேஷ், பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளில் இருந்து இந்தியாவில் குடிபெயர்ந்தவர்கள் குறிப்பாக கிறிஸ்தவர்கள்,சீக்கியர்கள்,புத்த மதத்தைச் சேர்ந்தவர்கள் அவர்களுக்கு குடியுரிமை கொடுப்பது என்று அந்த சட்டத்தில் இடம் கொடுக்கப்பட்டுள்ளது...

ஆனால் முஸ்லீம்கள் முற்றிலும் புறக்கணிக்கப்பட்டு இருக்கின்றார்கள்

இது இந்திய ஜனநாயகத்திற்கு முரண்பாடானது என்று பல அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பாக காங்கிரஸ் கட்சியும், தேசிய கட்சிகளும் ஒருங்கிணைந்து பாராளுமன்றத்தில் எதிர்த்தும் சட்ட வல்லுனர்கள் தங்களுடைய கருத்துக்களை பதிவு செய்தது அதை ஏற்றுக் கொள்ளாமல் மத்திய அரசானது அதை இரண்டு அவைகளை நிறைவேற்றி மத்திய அரசு ஜனநாயகப் படுகொலை செய்திருக்கிறது.

குறிப்பாக இந்திய அரசமைப்பு சட்டத்தின் படி மதத்தின் பெயரால் மக்களை பிரித்து பார்க்க கூடாது என தெளிவாக கூறுகின்றது.

அகமையர்கள் எந்த இனத்தை சேர்ந்தவர் நீக்கப்பட்டு இருக்கின்றார்கள்,இலங்கையில் இருந்து தமிழகத்திற்கு வந்திருக்கின்ற தமிழர்கள் குறிப்பிடப்படவில்லை.

பாரத பிரதமர் நரேந்திர மோடியின் அரசு இந்துத்துவா கொள்கையை நிறைவேற்றுகின்ற முறையில் குறிப்பாக இஸ்லாமிய சமுதாய மக்களை புறக்கணித்து அவர்களை இந்த நாட்டினுடைய பிரஜைகளாக கருதி இந்த சட்டத்தை கொண்டு வந்து இருக்கின்றார்கள்.

அசாம் மாநிலத்தில் மட்டும் 20 லட்ச்சத்திற்க்கும் மேற்பட்டவர்கள் குடியுரிமை இல்லாமல் இருந்து வருகிறார்கள்.வடகிழக்கு அசாம் மாநிலம் எல்லாம் பற்றி எரிகிறது.

பஞ்சாப்,கேரளம,வங்கதேசம் போன்ற மாநில முதலமைச்சர்கள் தெள்ளத்தெளிவாக எங்களுடைய மாநிலத்தில் இச்சட்டத்தை நடைமுறைபடுத்த மாட்டோம் என்று கூறியுள்ளார்கள்

நானும் இதில் உறுதியாக கூறுகின்றேன் புதுச்சேரி மாநிலத்திலும் மக்களை மதத்தின் பெயரால் பிரிக்க இந்த சட்டத்தை புதுச்சேரி மாநிலத்தில் நாங்கள் நடைமுறைபடுத்த மாட்டோம்.

குறிப்பாக மத்திய அரசானது இந்திய ஜனநாயகத்தை மீறி இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறி நாட்டின் சம்பிரதாயத்தை மீறி ஒரே மதம், ஒரே நாடு,ஒரே மொழி என்று இந்த நாட்டை பிரித்தாளர்க்கின்றார்கள்.

மதசார்பற்ற இந்திய நாட்டில் இதை ஏற்றுக் கொள்ள முடியாது இந்த சட்டத்தை முழுமையாக நாங்கள் புறக்கணிக்கிறோம் என இவ்வாறு கூறுகிறார்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.