ETV Bharat / state

கார்த்திகை மகா தீபத்தை காண அனுமதி மறுப்பு: ஆபத்தான முறையில் மலை ஏறிச் சென்ற பக்தர்கள்!

author img

By

Published : Nov 29, 2020, 8:00 PM IST

மதுரை: திருப்பரங்குன்றம் மலைமேல் ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தை காண பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பக்தர்கள் ஆபத்தான முறையில் மலைமேல் ஏறிச் சென்றனர்.

ஆபத்தான முறையில் மலை மேல் ஏறும் பக்தர்கள்
ஆபத்தான முறையில் மலை மேல் ஏறும் பக்தர்கள்

தமிழ் கடவுள் முருகனின் ஆறுபடை வீடுகளில் முதல்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் இன்று (நவ.29) மாலை 6 மணியளவில் கார்த்திகை மகா தீபமானது மலை மேலுள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் மேலே ஏற்றப்பட்டது.

ஆண்டுதோறும் திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள படிக்கட்டு வழியாக மலைக்கு மேலுள்ள காசி விஸ்வநாதர் கோயிலில் தரிசனம் செய்யும் பக்தர்கள், பின்பு மாலையில் மலை மேலிருந்து மகா தீபத்தை காண்பது வழக்கம். இந்தாண்டு, கரோனா தொற்றின் காரணமாக மலைக்கு பின்புறமுள்ள படிக்கட்டு வழியாக பக்தர்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டது.

இதனால், திருப்பரங்குன்றம் மலைமீது ஏற்றப்பட்ட கார்த்திகை மகா தீபத்தை பார்ப்பதற்காக காலை முதலே பக்தர்கள் பலர் ஆபத்தை உணராமல் மலை மேலே குறுக்கு வழியில் ஏறிச் சென்றனர்.

ஆபத்தான முறையில் மலை மேல் ஏறும் பக்தர்கள்

ஆண்கள் மட்டுமல்லாமல் குழந்தைகள், பெண்கள் ஆகியோரும் ஆபத்தான முறையில் கார்த்திகை மகா தீபத்தை காண்பதற்காக மலை மீது ஏறிச் சென்றனர்.

இதையும் படிங்க: கார்த்திகை தீபத் திருவிழா: ஏழூர் அழகியநாயகி அம்மன் கோயிலில் ஏற்றப்பட்ட தீபம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.