ETV Bharat / state

தகாத உறவின் காரணமாக வாலிபர் கொன்று புதைப்பு

author img

By

Published : Jul 12, 2019, 12:50 PM IST

கிருஷ்ணகிரி: திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவின் காரணமாக  பைனான்சியர் கொலை செய்யப்பட்டு ஏரியில் புதைக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

person got killed due to extra marital affair

கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டினம் சின்னமுத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் லட்சுமணன் (55). அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை வைத்துள்ள இவர் அங்கு பைனான்ஸ் தொழிலிலும் ஈடுபட்டுள்ளார். இந்நிலையில் இவருக்கும் தருமபுரி மாவட்டம் பொம்ம அள்ளி பகுதியைச் சார்ந்த ரங்கநாதன் (30) என்பவருக்கும் நட்பு ஏற்பட்டுள்ளது.

ரங்கநாதன் திருமணம் செய்யாமலேயே பெண் ஒருவரோடு காவேரிப்பட்டினம் பகுதியில் வீடு எடுத்துத் தங்கியுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் அடிக்கடி ரங்கநாதன் வீட்டுக்குச் செல்ல ரங்கநாதனின் காதலியோடு லட்சுமணனுக்கும் தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து பலமுறை எச்சரித்தும் லட்சுமணன் ரங்கநாதனின் காதலியிடம் இருந்த உறவைத் துண்டிக்காமல் தொடர்ந்ததால் ஆத்திரமடைந்த ரங்கநாதன் லட்சுமணனை கொலை செய்து அருகே உள்ள முக்குளம் ஏரியில் புதைத்துள்ளார்.

தகாத உறவின் காரணமாக வாலிபர் கொலை

10 நாட்களாக லட்சுமணன் தனது வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த ரங்கநாதனின் காதலி காவேரிப்பட்டினம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இந்நிலையில் ரங்கநாதன் காரிமங்கலம் காவல்நிலையத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார். இதனைத் தொடர்ந்து புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Intro:tn_dpi_01_kalakadal_murder_vis_7204444Body:tn_dpi_01_kalakadal_murder_vis_7204444Conclusion:கள்ளக்காதல் விவகாரம் பைனான்சியர் கொலை செய்து ஏரியில் புதைப்பு போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்...... கிருஷ்ணகிரி மாவட்டம் காவேரிப்பட்டணம் சின்னமுத்தூர் பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் 55 இவர் அப்பகுதியில் எலக்ட்ரிக்கல் கடை மற்றும் பைனான்ஸ் செய்து வந்துள்ளார். இவர் எப்போதும் சுமார் 40 பவுன் தங்க நகை யோடு வெளியில் சுற்றி வருவது வாடிக்கையாக கொண்டுள்ளார். இவருக்கும் தர்மபுரி மாவட்டம் பொம்ம அள்ளி பகுதியைச் சார்ந்த ரங்கநாதன் (30) இவருக்கும் பைனான்ஸ் கொடுத்து வாங்குவதில் நட்பு ஏற்பட்டுள்ளது. ரங்கநாதனுக்கு திருமணம் நடைபெறாமல் பெண் ஒருவரோடு காவேரிப்பட்டினம் பகுதியில் வீடு எடுத்து தங்கியுள்ளார். இந்நிலையில் லட்சுமணன் அடிக்கடி ரங்கநாதன் வீட்டுக்கு சென்றுள்ளார். இதனால் ரங்கநாதனின் கள்ளக் காதலியோடு லட்சுமணனுக்கு தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக லட்சுமணன் மற்றும் ரங்கநாதன் இருவருக்கும் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு ரங்கநாதன் லட்சுமணனை எச்சரித்துள்ளார்.லட்சுமணன் ரங்கநாதனின் காதலியிடம் இருந்த நட்பை துண்டிக்காமல் தொடர்ந்துள்ளார். இதனால் கோபமுற்ற ரங்கநாதன் லட்சுமணனை கொலை செய்து தர்மபுரி மாவட்டம் பொம்ம அள்ளி அருகே உள்ள முக்குளம் ஏரியில் புதைத்துள்ளார். தனது கள்ளக்காதலன் லட்சுமணன் கடந்த 10 நாட்களாக தனது வீட்டுக்கு வராததால் சந்தேகமடைந்த கள்ளக்காதலி காவேரிப்பட்டணம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரில் ரங்கநாதன் மீது சந்தேகம் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். போலீசார் விசாரிப்பதை அறிந்த ரங்கநாதன் காரிமங்கலம் காவல்நிலையத்தில் கொலை செய்ததை ஒப்புக் கொண்டு சரணடைந்துள்ளார்.இதனைத் தொடர்ந்து காரிமங்கலம் போலீஸார் மற்றும் காவேரிப்பட்டணம் போலீசார் இணைந்து ரங்கநாதனிடம் விசாரணை நடத்தி தர்மபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜன் முன்னிலையில் லட்சுமணனை புதைத்த ஏரியில் சடலத்தை தோண்டி எடுத்து மருத்துவர்கள் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்தனர். பிரேத பரிசோதனை முடிந்த பிறகு லட்சுமணன் உடலை அவரது மகன்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.இக்கொலை வழக்கில் ரங்கநாதன் ஒருவர் மட்டுமே இக்கொலையில் ஈடுபட்டாரா அல்லது பலர் ஈடுபட்டார்களா என்றும் பல்வேறு கோணங்களில் காரிமங்கலம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.பைனான்சியர் கள்ளக்காதல் விவகாரத்தில் கொலை செய்த ஏரியில் புதைத்த சம்பவம் இப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. போட்டோ ரங்கநாதன் கொலையாளி
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.