ETV Bharat / state

சிங்கிலாக சிக்கிக் கொண்ட திமுக பிரமுகர் : கும்பலாக சேர்ந்து தாக்கிய நாம் தமிழர் கட்சி!

author img

By

Published : Jul 24, 2023, 10:40 PM IST

dmk-executive-attacked-by-group-of-naam-tamilar-members-in-krishnagiri
திமுக பிரமுகரரை தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்

நாம் தமிழர் கட்சியின் ஆர்ப்பாட்டதின் போது திமுக பிரமுகர் திடீரென புகுந்து வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது நாம் தமிழர் கட்சியினர் கும்பலாக சேர்ந்து தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

திமுக பிரமுகர் :கும்பலாக சேர்ந்து தாக்கிய நாம் தமிழர் கட்சியினர்

கிருஷ்ணகிரி: போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகேவுள்ள புளியண்டபட்டி கிராமத்தில் குறவர் இனத்தைச் சார்ந்த மக்கள் வசித்து வருகின்றனர். இதில் ஐயப்பன் என்பவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் உள்ள பகுதியில் உள்ள நகைக்கடையில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டதாகவும் இது குறித்து ஆந்திர மாநில காவல் துறையினர் ஐய்யப்பன், அவரது தாயார் கண்ணம்மாள் மற்றும் உறவினர் அருணா, 7 வயது குழந்தை உள்பட நான்கு பெயரை கடந்த ஜுன் 11 ஆம் தேதி விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சத்யா என்பவர் ஆன்லைனில் புகார் மனு அளித்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஆத்திர மாநில காவல் துறையினர் கடந்த ஜூன் மாதம் 12ஆம் தேதி இரவு 15 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் புளியாண்டபட்டி கிராமத்தில் உள்ள சத்யாவின் வீட்டிற்குள் நுழைந்து வீட்டில் உள்ள சிசிடிவி கேமராவை சேதப்படுத்திவிட்டு, ஹார்டு டிஸ்க்கை எடுத்துக் கொண்டு பின்னர் சத்யா, ரமேஷ், ரேணுகா, அருணா, பூமதி மற்றும் ஆறு வயது குழந்தை உள்பட ஆறு பேரை அழைத்துச் சென்று, சாதி குறித்து பேசியதாகவும் பிறப்புறுப்பில் மிளகாய் பொடிகளை தூவி சித்திரவதை செய்தது, பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

இச்சம்பவத்திற்கு தமிழ்நாடு குறவினர் சங்கம் உள்பட பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்து பாதிக்கப்பட்ட குறவர் மக்களை மீட்க வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு கோரிக்கை வைத்தனர். இதனையடுத்து தமிழ்நாடு காவல் துறையினர் மற்றும் ஆந்திர காவல் துறையினர் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று, இரண்டு குழந்தை உள்பட எட்டு பேரை விடுவித்தனர். மேலும், விசாரணைக்காக ஐயப்பன் மற்றும் அவரது மனைவி பூமதி ஆகிய இரண்டு பேரையும் அங்கே காவலில் வைத்ததாக தெரிகிறது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சியின் மகளிர் அணி சார்பில் ஆந்திர காவல் துறையினருக்கு எதிராக போச்சம்பள்ளி அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்கு வந்த மேகநாதன் என்ற திமுக பிரமுகர், நாம் தமிழர் கட்சியினர் விவசாய நிலங்களை ஆக்கிரமித்து மிரட்டுவதாக கூறி, அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பீர்களா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்கள் தனியாக சிக்கிய திமுக நிர்வாகியை கும்பலாக சேர்ந்து தாக்கினர். இதனை கண்ட காவல் துறையினர் உள்ளே புகுந்து திமுக நிர்வாகியை காப்பாற்ற முயன்றனர். ஆனாலும் தாக்குதலை நிறுத்தாதவில்லை ஒரு வழியாக காவல் துறையினர் போராடி திமுக நிர்வாகியை அங்கிருந்து மீட்டுச் சென்றனர். இந்த நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல் நிலையத்தில் திமுகவினர் புகார் அளித்துள்ளனர்.

இதையும் படிங்க : பெண்ணின் வயிற்றில் கத்திரிகோல்கள் வைத்து தைத்த கொடூரம்.. 7 ஆண்டுகளுக்கு பின் விசாரணை அறிக்கை தாக்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.