கரூரில் ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்’ திட்டம்; அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்

author img

By

Published : Nov 27, 2021, 5:16 PM IST

நிமிர்ந்து நில் துணிந்து சொல் திட்டம்

கரூர் மாவட்டத்தில் உள்ள பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்' என்ற திட்டத்தை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.

கரூர்: கோயம்பேடு ஊராட்சி பகுதியில் கால்நடை வளர்ப்பு விவசாயிகள் பயன்பெறும் வகையில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தக கட்டடம் அமைப்பதற்கான பூமி பூஜை பணியினை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தொடங்கிவைத்தார்.

தொடர்ந்து இலங்கை தமிழர்களுக்கு கரூர் ராயனூர் இலங்கை தமிழர் மறுவாழ்வு மையத்தில் வசித்துவரும் குடும்பங்களுக்கு 100 புதிய எரிவாயு இணைப்பு, 434 குடும்பங்களுக்கு புதிய வீடுகள் கட்டும் திட்டத்தை அவர் தொடங்கிவைத்தார்.

பின்னர் பாலியல் துன்புறுத்தல்களை தடுக்கும் வகையில் நிமிர்ந்து நில் - துணிந்து சொல் எனும் திட்டத்தினை தொடங்கி வைத்து பள்ளி மாணவர்கள் மத்தியில் அமைச்சர் செந்தில் பாலாஜி உரையாற்றினார்.

கரூர் மாவட்டத்தில் ஒன்பதாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை உள்ள 201 பள்ளிகளை சேர்ந்த 26,085 பெண் குழந்தைகள் பயன்பெறும் வகையில் இரண்டு முக்கிய நோக்கங்களை அடிப்படையாகக் கொண்டு ‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்' எனும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

நிமிர்ந்து நில் துணிந்து சொல் திட்டம்

‘நிமிர்ந்து நில், துணிந்து சொல்’ திட்டம்

மாவட்டத்தில் உள்ள அரசு துறை சார்ந்த தலைவர்களைக் கொண்டு 20 குழுக்களாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் பிரிக்கப்பட்டு ஒரு குழு நாளொன்றுக்கு ஐந்து பள்ளிகளில் சென்று பாலியல் வன்முறை பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்த உள்ளனர்.

இத்திட்டத்தின் பிரதான நோக்கம் பெண் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்வது. மேலும், பெண் குழந்தைகள் பள்ளியில் தெரிவிக்கும் தகவல்கள் ரகசியம் காக்கப்படும். பாலியல் ரீதியான வன்முறைகள் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும்.

எனவே கல்வி உதவி வழிகாட்டு மையத்திற்கு 14417 எண்ணிற்கும், குழந்தைகள் உதவிக்கு 1098 எண்ணிற்கும், மாவட்ட நிர்வாகத்திற்கு 8903331098 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும் தொடர்பு கொள்ளலாம். இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி பேசியதாவது, "கரூர் மாவட்டத்தில் உள்ள 26 ஆயிரம் மாணவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்திய பிறகு இனி கோவை கரூர் போன்ற நகரங்களில் நடைபெற்ற சம்பவங்களைப் போன்று தமிழ்நாட்டில் வேறு எங்கும் இல்லை என்ற சூழ்நிலையை உருவாக்க வேண்டும். மற்றவர்களுக்கு உதாரணமாக பெண் குழந்தைகள் வீரமங்கைகளாகத் திகழ வேண்டும்.

கரூர் சிறந்த மாவட்டம்

பெண் குழந்தைகள் நல்ல நிலைக்கு சென்றால் தான் பெற்றோருக்கு பொறுக்கக் கூடிய அங்கீகாரம் கௌரவம் அனைத்தும். பத்தாம் வகுப்பு படித்துவிட்டு பதினொன்றாம் வகுப்பில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யும் உரிமை பெற்ற நீங்கள் இந்த வயதில் விரும்பத்தகாத செயல்களால் பாதிக்கப்படும் போது அதை தைரியமாக மற்றவர்களிடம் தெரிவிக்கவேண்டும்.

காலதாமதமாக தெரிவிப்பதினால் குற்றவாளிகள் கண்டறியப்பட்டதில் காலதாமதம் ஏற்படலாம். இதனால் குற்றங்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். இனி கரூர் மாவட்டத்தில் எந்த ஒரு விரும்பத்தகாத செயலும் நடைபெற கூடாது என அனைவரும் உறுதி ஏற்போம்.

இந்தியாவில் முன்மாதிரியாக தமிழ்நாடு சிறந்த மாநிலம், தமிழ்நாட்டில் கரூர் சிறந்த மாவட்டம் என்ற பெயரை பெற பெண் குழந்தைகள் இத்திட்டத்தின் மூலம் விழிப்புணர்வு பெறவேண்டும். அதற்காக நாம் அனைவரும் சேர்ந்து பணியாற்றுவோம்" என்றார்.

இதையும் படிங்க: Chennai Rain: சென்னையில் இயல்பைவிட 77 சதவீதம் மழை அதிகம்- சென்னை வானிலை ஆய்வு மையம்

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.