ETV Bharat / state

உயர்கல்வியில் பெயிண்டிங் கோர்ஸ் தொடங்க வேண்டும் என கோரிக்கை!

author img

By

Published : Feb 17, 2023, 12:58 PM IST

பெயிண்டிங் படிப்பு உயர்கல்வியில் தொடங்க கோரிக்கை
பெயிண்டிங் படிப்பு உயர்கல்வியில் தொடங்க கோரிக்கை

பெயிண்டிங் கலை வடிவமைப்பை இளைஞர்கள் கற்றுக் கொள்ள பெயிண்டிங் பாடப்பிரிவை கல்லூரி பாட பிரிவில் சேர்க்க வேண்டுமென தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்ட் அசோசியேஷன் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது.

பெயிண்டிங் படிப்பு உயர்கல்வியில் தொடங்க கோரிக்கை

கரூர்: தமிழ்நாடு பெயிண்டிங் காண்ட்ராக்ட் அசோசியேஷன் கரூர் கிழக்கு மாவட்ட பத்தாம் ஆண்டு தொடக்க விழா, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட தனியார் கூட்டரங்கில், மாநில தலைவர் பன்னீர்செல்வம் தலைமையில் நடைபெற்றது. இதில், மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், மாநில பொருளாளர் ராஜன், கரூர் கிழக்கு மாவட்ட தலைவர் ஜஸ்டின் ராமன், கிழக்கு மாவட்ட செயலாளர் சந்திரசேகர் உள்ளிட்ட சங்கத்தின் மாநில அளவிலான நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கண்ணன், கரூர் காவல் துணை கண்காணிப்பாளர் தேவராஜன் சிறப்பு அழைப்பாளர்களாக பங்கேற்றனர். சங்கத்தில் மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம் புதியதாக பொறுப்பேற்றுக் கொண்ட நிர்வாகிகளுக்கு பதவி பிரமாணமும், நலத்திட்டங்களும் வழங்கி சிறப்புரையாற்றினார்.

நிகழ்ச்சியின் இறுதியில் செய்தியாளர்களை சந்தித்த மாநிலத் தலைவர் பன்னீர்செல்வம், பெயிண்டிங் தொழிலுக்கு அங்கீகாரம் வேண்டும் எனவும், பெயிண்டிங் தொழிலில் ஈடுபடும் தொழிலாளியின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பும், அவர்களது குழந்தைகள் படிப்பதற்கான வசதிகளை ஏற்படுத்தி தருவது தொடர்பாக நலவாரியம் அமைக்க வேண்டும் என்றும் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தார்.

மேலும் வட மாநில தொழிலாளர்களின் வரத்து அதிகமாக உள்ளதால், உள்ளூர் தமிழர்களுக்கு வேலை வாய்ப்பு இல்லாத சூழல் ஏற்பட்டு வருகிறதாக கூறிய அவர், இதனை தடுக்கும் விதமாக வட மாநில தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கக் கூடாது என தனி சட்டம் இயற்ற வேண்டும் என்றும், இது குறித்து தமிழக அரசு நல்ல முடிவு எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

தொடர்ந்து பெசிய அவர், தமிழக உயர்கல்வித்துறையில் பொறியியல் படிப்புக்கு என தனி பாடப்பிரிவு உள்ளதைப் போல, பெயிண்டிங் பிரிவுக்கும் தனி படிப்பினை உருவாக்க வேண்டும் என்றும், அதன் மூலம் எதிர்வரும் இளைஞர்கள் பெயிண்டிங் படிப்பை படித்து வர்த்தக நிறுவனங்கள் வீடுகள் போன்றவற்றுக்கு பெயிண்டிங் பொறியாளர்களாக திகழ தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

இதே போல் தமிழகம் முழுவதும் அரசு விளம்பரங்களை சுவர் மூலமே செய்வதன் மூலம் தமிழக முழுவதும் உள்ள ஓவியர்கள் வேலைவாய்ப்பு பெற வாய்ப்புள்ளதாக பேசிய அவர், தமிழக அரசு ஓவியர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் சுவர்களில் பெயிண்டிங் விளம்பரங்கள் மேற்கொள்ள வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

இதையும் படிங்க: சீட்டு கேட்டு ரூ.1 கோடி பேரம்? - ஓபிஎஸ் ஆதரவாளர் புகார்; கே.பி.முனுசாமி புதிய விளக்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.