ETV Bharat / state

பொய்களை மட்டுமே பேசி வரும் அண்ணாமலை - அமைச்சர் செந்தில் பாலாஜி

author img

By

Published : May 24, 2022, 10:52 PM IST

பொய்களை மட்டுமே பேசி வரும் அண்ணாமலை
பொய்களை மட்டுமே பேசி வரும் அண்ணாமலை

ஒன்றிய அரசுக்கு 55 சதவீதமும் மாநில அரசுக்கு 45 சதவீதமும் வரி வீதம் சேர்ந்துதான் பெட்ரோல் விலை டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு வேளாண் துறை சார்பில் கலைஞரின் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி இத்திட்டத்தை நேற்று(மே.23) காணொலி மூலமாக தமிழ்நாடு முதலமைச்சர் சென்னையில் தொடக்கி வைத்தார். கரூர் பஞ்சமாதேவி கிராமத்தில் மின்னாம் பள்ளியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபு சங்கர் தலைமை தாங்கினார்.

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, ”கரூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டுள்ள வரலாற்று சிறப்புமிக்க திட்டத்தில் 157 ஊராட்சிகளில், 75 ஊராட்சிகளில் இத்திட்டம் முதல் கட்டமாக இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்தப்படும்.

பொய்களை மட்டுமே பேசி வரும் அண்ணாமலை

கரூர் மாவட்டத்திற்கு மட்டும் சுமார் 7.8 கோடி அளவுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு 1859 ஏக்கர் தரிசு நிலங்கள் விவசாய பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு முழுவதும் அடுத்த 5 ஆண்டுகளில் 10 லட்சம் ஏக்கர் விவசாய பாசனம் மேற்கொள்ளவும், இத்திட்டத்தில் சுமார் 70 லட்சம் விவசாயிகள் பயன் பெற கூடிய திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் நேற்று(மே.23) தொடக்கி வைத்தார்.

விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தக்கூடிய இத்திட்டம் இந்தியாவுக்கு வழிகாட்டக்கூடிய திட்டமாக அமையும்’ என்று தெரிவித்தார்.

மேலும் பெட்ரோல், டீசல் வரி ஒன்றிய அரசுக்கு வைத்திருப்பது குறித்து செய்தியாளர்கள் கேட்டதற்கு பதிலளித்த அமைச்சர், ’பெட்ரோல், டீசல் மீதான வரி விதிப்பில் இரண்டு வரிகள் விதிக்கப்படுகின்றன.

அதில் 100% ஒன்றிய அரசு மட்டுமே வரி வருவாய் பெறுகிற வரியில் எந்த வரி குறைப்பும் மேற்கொள்ளப்படவில்லை. இவற்றில் விகிதாச்சார அடிப்படையில் ஒன்றிய அரசும், மாநில அரசும் பகிர்ந்து கொள்ளக்கூடிய வரியில் மட்டுமே தற்பொழுது குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் ஒன்றிய அரசுக்கு 55 சதவீதமும் மாநில அரசுக்கு 45 சதவீதமும் வரி வீதம் சேர்ந்துதான் பெட்ரோல் விலை, டீசல் விலை குறைக்கப்பட்டுள்ளது. ஆனால், அதனை மறைத்துவிட்டு ஏதோ ஒன்றிய அரசு மட்டும் வரி குறைப்பு செய்து உள்ளதாக சமூக வலைதளங்களில் செய்தி வெளியிட்டு வருகின்றனர்.

மேலும் பெட்ரோல் டீசல் மீதான வரிவிதிப்பில் 100 சதவீதம் மத்திய அரசு மட்டுமே வசூலிக்கும் வரியில் எவ்வித வரி குறைப்பும் மேற்கொள்ளவில்லை. இந்தியாவுக்கே வழிகாட்டக்கூடிய முதலமைச்சராக தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சி நடத்தி வருகிறார்.

ஆனால், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பொய்களை மட்டுமே ஊடகங்களில் உண்மைக்கு புறம்பான தவறான தகவல்களைத் தொடர்ந்து அளித்து வருகிறார். சிலருக்கு புரிதல் இருக்கும். புரிந்துகொள்ளும் பக்குவமும் இருக்கும். ஆனால் இந்த இரண்டும் இல்லாதவராக அவர் இருக்கிறார்’ என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.

இந்நிகழ்ச்சியில் கரூர் மாவட்ட வேளாண் மற்றும் கலைத்துறை துறை அலுவலர்கள் மற்றும் விவசாயிகள், ஊராட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'கொலைநகரமாக மாறும் தலைநகரம்' - முதலமைச்சரை தாக்கும் ஈபிஎஸ்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.