ETV Bharat / state

9 கிராமங்களில் 100% கரோனா தடுப்பூசி - கரூர் ஆட்சியர் பாராட்டு

author img

By

Published : Aug 8, 2021, 10:00 PM IST

கரூர் மாவட்டத்தில் ஒன்பது கிராமங்களில் 100 விழுக்காடு கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர், மருத்துவர்களுக்கு சான்றிதழ், கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியர்  பாராட்டு தெரிவித்தார்.

ஆட்சியர் பாராட்டு
ஆட்சியர் பாராட்டு

கரூர்: கரோனா தொற்று பரவலைத் தடுக்க தமிழ்நாடு முழுவதும் தடுப்பூசி செலுத்தும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டாலும் மருத்துவம், சுகாதார துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

கரூர் மாவட்டத்தில் கரோனா மூன்றாவது அலை முன்னெச்சரிக்கையாக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.

3ஆவது அலை முன்னெச்சரிக்கை

புகைப்படக் கண்காட்சி, கரோனா விழிப்புணர்வு பேரணி, பள்ளி மாணவர்களுக்கான விழிப்புணர்வு வினாடி வினா, ஓவியப்போட்டி, குறும்படப் போட்டி, வணிகர்களுக்கான உறுதிமொழி ஏற்பு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

ஆட்சியர் பாராட்டு
ஆட்சியர் பாராட்டு

அதே சமயம் மாவட்டத்தில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என அனைத்து பகுதிகளிலும் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதுவரை மாவட்டத்தில் 3 லட்சத்து 20 ஆயிரத்து 444 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

100% தடுப்பூசி

மாவட்டத்தில் உள்ள ஒன்பது கிராமப்புறங்களில் வசிக்கும் மக்கள் அனைவருக்கும் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் 100% கரோனா தடுப்பூசி செலுத்திய செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்களுக்கு பாராட்டு விழா நேற்று (ஆகஸ்ட் 7) ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.

பாராட்டு விழா

மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் முத்துச்செல்வன், மருத்துவ பணிகள் இணை இயக்குநர் ஞானக்கண் பிரேம் நிவாஸ், சுகாதாரத்துறை துணை இயக்குநர் சந்தோஷ்குமார் உள்ளிட்ட சுகாதாரத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

கரோனா விழிப்புணர்வு
கரோனா விழிப்புணர்வு

கரூர் வட்டாரத்தில் உள்ள கிழக்கு தவிட்டுப்பாளையம் தோட்டக்குறிச்சி, தாந்தோணி வட்டாரத்தில் ஆண்டான்கோயில், கடவூர் வட்டாரத்தில் வரவணை, கிருஷ்ணராயபுரம் வட்டாரத்தில் மேலமாயனூர், தோகமலை, ஆர்ச்சம்பட்டி உட்பட ஒன்பது கிராமங்களில் சிறப்பாக பணியாற்றி 100 விழுக்காடு தடுப்பூசி செலுத்திய செவிலியர்கள், சுகாதார ஆய்வாளர்கள், மருத்துவர்கள் அடங்கிய குழுவிற்கு பாராட்டுச் சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கி மாவட்ட ஆட்சியர் பாராட்டினார்.

இதையும் படிங்க: கோவாக்சின், கோவிஷீல்டு கலவை - நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கிறது'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.