அய்யா வைகுண்டர் தலைமைப்பதியில் தலைப்பாகை அணியாத உதயநிதி - வலுக்கும் கண்டனம்

author img

By

Published : Nov 22, 2022, 10:34 PM IST

Etv Bharat

சாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு தலைப்பாகை அணியாமல் சென்ற உதயநிதி ஸ்டாலினுக்கு பலதரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

கன்னியாகுமரி அருகே உள்ள சுவாமிதோப்பு அய்யா வைகுண்டர் தலைமைப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த திமுக இளைஞரணிச்செயலாளர் உதயநிதி ஸ்டாலின், கோயிலின் பள்ளியறை வரை சென்று இன்று (நவ.22) தரிசனம் செய்தார்.

அப்போது சுவாமி தோப்பு தலைமை பதியில் காலங்காலமாக கடைபிடிக்கப்பட்டு வரும் 'தலைப்பாகை' மற்றும் 'திரு நாமம்' ஆகியவைகளுக்கு இடமளிக்காமல் சென்றார். அவருடன் சென்ற மேயரும் தலைப்பாகை அணியாமல் சென்றனர்.

இந்நிலையில் அவரது செயலுக்கு அய்யாவழி மத போதகர் ஶ்ரீ குரு சிவ சந்திர சுவாமிகள் கண்டனம் தெரவித்துள்ளார்.

மேலும் அவர் கூறும் போது, 'கடவுளே இல்லை என்ற கொள்கையை கொண்ட ஒரு கட்சியின் முக்கியமான ஒருவர் இந்த திருநடைக்கு வந்ததை நான் வரவேற்கின்றேன். ஆனால், அய்யா வழிக்கு என்று ஒரு நடைமுறையை உள்ளது. அதற்கு மாறாக பள்ளியறையில் தலையில் தலைப்பாகை அணியாமல் திருநாமம் இடாமல் பள்ளி அறைக்கு சென்றது மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்' எனக் கூறியுள்ளார்.

இதற்கு முகநூலில் மன்னிப்புக்கேட்டு சாமிதோப்பு தலைமைபதி நிர்வாகி பால ஞனாதிபதி வெளியிட்ட பதிவில், 'அய்யா வைகுண்டர் காலடி தொழுது எனது மன்னிப்பைக் கேட்டுக்கொள்கிறேன். நான் அழைக்கவில்லை. வருவதாக மேயர் தகவல் சொன்னார். நான் மகிழ்ச்சியுடன் வரவேற்றேன்.

உதயநிதி ஸ்டாலின் வருகை - சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஞனாதிபதி மன்னிப்பு!
உதயநிதி ஸ்டாலின் வருகை - சாமிதோப்பு தலைமை பதி நிர்வாகி பால ஞனாதிபதி மன்னிப்பு!

சட்டையிடாமல் தலைப்பாகையுடன் வரவேண்டும் என்பதை ஏற்றுக்கொண்டார்கள். அதனால், ஏற்றுக் கொண்டேன்; ஐந்து நபர்கள்தான் உள்ளே வருவார்கள் என்றார்கள். ஏற்றுக்கொண்டேன். நெருக்கடி தள்ளுமுள்ளு வகையற்றநிலையில் நடந்துவிட்டது. அய்யா வழியினரைப் பொறுத்துக் கொள்ளும்படி வேண்டுகிறேன்' எனப் பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'காசி தமிழ் சங்கமம்' பாவத்தை கழுவ முடியாது என முரசொலி தாக்கு! பாஜகவின் பதிலடி என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.