ETV Bharat / state

4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்டா? 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் போராட்டம்!

author img

By

Published : Feb 15, 2023, 2:13 PM IST

அஞ்சுகிராமம் பகுதியில் 4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ நிறுத்தம் அமைத்து கொடுத்த ஊராட்சி நிர்வாகத்தால் 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்டா?... 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் போராட்டம்
4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்டா?... 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் போராட்டம்

4 ஆட்டோக்களுக்கு தனி ஆட்டோ ஸ்டாண்டா?... 43 ஆட்டோ டிரைவர்கள் குடும்பத்துடன் போராட்டம்

கன்னியாகுமரி: அஞ்சுகிராமம் பேருந்து நிலையத்திற்கு அருகே கிழக்கு பஜாரில் வாடகை ஆட்டோ நிறுத்தம் காணப்படுகிறது. இங்கு 43 ஆட்டோக்கள் அண்ணா தொழிற்சங்கம் மூலம் பதிவு செய்யப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் அஞ்சுகிராமம் தெற்கு பஜார் பகுதியில் தொ.மு.ச., தொழிற்சங்கத்தை சேர்ந்த 4 ஆட்டோக்கள் இயக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில் தற்போது அஞ்சுகிராமம் பஞ்சாயத்து திமுக வசம் உள்ளதால், பேருந்து நிலையம் அருகில் புதியதாக வாடகை ஆட்டோ நிறுத்தம் உருவாக்கி அங்கு 4 ஆட்டோக்கள் மட்டும் நிறுத்தப்பட்டு இயக்கபடுவதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக கிழக்கு பஜார் பகுதியில் உள்ள 43 ஆட்டோக்களுக்கும் வருவாய் இழப்பு ஏற்படுவதாகவும், இதன் காரணமாக சவாரி எதுவும் இல்லாமல் கடன்பெற்று வாங்கிய ஆட்டோக்களுக்கு தவணை தொகையை செலுத்த முடியாமலும், தங்கள் குடும்பத்திற்கு அன்றாட தேவைகளை பூர்த்தி செய்ய முடியாமல் தவித்து வருகிறோம்.

மேலும் பல முறை காவல்துறை, மாவட்ட நிர்வாகத்திடமும் புகார் அளித்தும் எவ்வித பயனும் இல்லாத நிலையில் இன்று 43 ஆட்டோ ஓட்டுனர்களும் தங்களது குடும்பத்துடன் சாலையோரமாக வீதியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்ந்து கன்னியாகுமரி காவல் நிலைய ஆய்வாளர் நடத்திய பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஆட்டோ ஓட்டுனர்கள் தற்காலிகமாக போராட்டத்தை நிறுத்தி கொண்டனர். 4 பேர் மட்டுமே செயல்படுத்தி வரும் ஆட்டோ நிறுத்தத்தை அப்புறப்படுத்தவில்லை என்றால் அடுத்தக்கட்டமாக தங்களது ஆட்டோ ஓட்டுனர் உரிமம், ஆர்.சி., புக் போன்றவற்றை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க போவதாகவும் கூறியுள்ளனர்.

இதையும் படிங்க: நூதன முறையில் மோசடி செய்து ஹைடெக் வாழ்க்கை.. குமரியில் ஓர் இஎம்ஐ(EMI) மோசடி மன்னன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.