ETV Bharat / state

கன்னியாகுமரி ஆறுகளில் வெள்ளம்.. நாகர்கோவிலைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு..

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 18, 2023, 5:16 PM IST

More than 10 villages around Nagercoil were cut off
நாகர்கோவிலை சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிப்பு

Flood in Kanyakumari: கன்னியாகுமரி மாவட்டத்தில் ஏற்பட்ட மழை மற்றும் அறுகளின் வெள்ளப்பெருக்கு காரணமாக நாகர்கோவிலைச் சுற்றியுள்ள 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளன.

கன்னியாகுமரி: கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் தண்ணீரில் மூழ்கி உள்ளன. பழைய ஆற்றின் கரையோரம் உள்ள அனைத்து கிராமங்களிலும் வெள்ளம் புகுந்து உள்ளது. மேலும், நாகர்கோவிலைச் சுற்றி 10க்கும் மேற்பட்ட கிராமங்கள் துண்டிக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், ஒவ்வொரு முறை பழைய ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடும்போதும், திருப்பதிசாரம் பகுதிகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றன. மேலும், ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து கிராமத்திற்குள் புகுந்ததால், நெசவாளர் காலணி பகுதியில் நேற்று (டிச.17) மாலை பொதுமக்கள் வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

தொடர்ந்து அந்த பகுதி வழியாகக் கால்வாயில் அளவுக்கு அதிகமாகத் தண்ணீர் நிரம்பி வழிவதால், வெள்ளம் சூழ்ந்த பகுதி இன்னும் இயல்பு நிலைக்குத் திரும்பவில்லை. இது குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், “கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக திருப்பதிசாரம் நெசவாளர் காலணியில் தண்ணீர் வரும்போதெல்லாம், அதற்கு மாற்று ஏற்பாடு செய்யப் பலமுறை கோரிக்கை விடுத்துள்ளோம்.

ஆனால், இதுவரை அந்த பிரச்சனை கண்டு கொள்ளப்படாததால், 2 நாட்களுக்கும் மேலாக நாங்கள் தண்ணீரில் தத்தளித்து வருகிறோம். எனவே உடனடியாக ஆற்றிற்குத் தடுப்புச் சுவர் கட்டி குடியிருப்புகளைப் பாதுகாக்க வேண்டும்” என்று கோரிக்கை விடுத்துள்ளனர். ஆற்றிற்குக் கரை கட்டித் தராததால், கடந்த 12 ஆண்டுகளாக இதே நிலை நீடித்து வருவதாகவும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவித்தனர்.

இந்நிலையில், 500 வீடுகளைக் கொண்ட மீனாட்சி கார்டன் தண்ணீரில் தத்தளிக்கிறது. 24 மணி நேரமாக வீட்டுக்குள் முடங்கிய நிலையில் மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளும் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அந்த வகையில், அப்பகுதியில் தண்ணீரில் விழுந்து கை முறிவு ஏறப்பட்டுத் தவித்த மூத்த பெண்மணியை, தயார் நிலையிலிருந்த தீயணைப்புத் துறையினர் மிதவை படகில் மீட்டு, மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். அதைத் தொடர்ந்து, அப்பகுதி பொதுமக்களின் நிலைப்பாட்டைச் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர், மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.

இதையும் படிங்க: 4 மாவட்டங்களில் தொடரும் கனமழை: மீட்பு, நிவாரணப் பணி குறித்து அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர் வெளியிட்ட செய்தி குறிப்பு..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.