நீர்நிலை தூர் வாரியதாக பல லட்சம் மோசடி: கல்வெட்டால் சிக்கிய அலுவலர்கள்

author img

By

Published : Aug 22, 2019, 6:13 AM IST

கன்னியாகுமரி: ராஜாக்கமங்கலம் அருகே பாசனகுளம் தூர் வார பொதுமக்கள் அலுவலர்களுக்கு மனு கொடுத்து வந்த நிலையில், குளம் தூர் வாரி, கால்வாய் சீரமைத்ததாகக் கூறி அலுவலர்கள் எட்டரை லட்சம் ரூபாய் மோசடி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன குளங்கள் தூர் வாரவும், கால்வாய்கள் சீரமைக்கவும் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். தர்மபுரம் ஊராட்சி வெள்ளாரன்விளை பகுதியில் உள்ள பெருங்குளம், கடந்த இரண்டாண்டுகளுக்கு முன் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில், நேற்று இந்த குளத்தின் கரையில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் திடீரென ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டது. அதில் பெருங்குளம் கரை மேம்பாடு செய்யப்பட்டதாகவும், 30/05/2019 முதல் 24/07/2019 வரை தினக்கூலி 200 ரூபாய் சம்பளத்தில், 2,527 பேர் பணி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனைப் பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.

நீர்நிலை தூர் வாரியதாக பல லட்சம் மோசடி..!

ஏற்கனவே பொதுமக்கள் சார்பில், ‘பெருங்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை முறையாகத் தூர் வார வேண்டும். குளத்திற்குத் தண்ணீர் வந்து செல்லும் கால்வாயைக் காணவில்லை, கண்டுபிடித்துத் தாருங்கள்’ என அலுவலர்களுக்கு மனு கொடுத்திருக்கும் நிலையில், பணிகளே செய்யாமல் எட்டரை லட்சம் ரூபாய் செலவு செய்ததாக வைத்தது ஏன்? பணி எங்கே நடந்தது? என ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர்.

அதற்கு கால்வாய் சுத்தம் செய்ததாகக் கூறி அவர்களைச் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அலுவலர்களும் அந்த கல்வெட்டை உடனடியாக அங்கிருந்து அகற்றினர். பணிகளே செய்யாமல், அந்த வேலைக்கான நிதியை அலுவலர்களே கையாடல் செய்துள்ளதாகவும், ஊழல் செய்த அரசுத் துறை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்பு காவல்துறையினரிடம் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.

Intro:கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பாசனகுளம் தூர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், தண்ணீர் செல்லும் கால்வாயை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்த நிலையில், குளம் தூர் வாரி, கால்வாய் சீரமைத்ததாக கூறி எட்டரை லட்ச ருபாய் மோசடி. பணி செய்ததாக கூறி அமைத்த கல்வெட்டை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி. Body:tn_knk_08_maintenance_public_complains_script_TN10005

கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் அருகே பாசனகுளம் தூர் வாரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், தண்ணீர் செல்லும் கால்வாயை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என பொதுமக்கள் அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வந்த நிலையில், குளம் தூர் வாரி, கால்வாய் சீரமைத்ததாக கூறி எட்டரை லட்ச ருபாய் மோசடி. பணி செய்ததாக கூறி அமைத்த கல்வெட்டை பார்த்த பொது மக்கள் அதிர்ச்சி.

கன்னியாகுமரி மாவட்டம் ராஜாக்கமங்கலம் ஒன்றியத்திற்குட்பட்ட தர்மபுரம் ஊராட்சி வெள்ளாரன்விளை பகுதியில் அதிகாரிகள் பணி செய்யாமலே 8.47 லட்ச ருபாய் கொள்ளையடித்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் பாசன குளங்கள் தூர் வாரவும், கால்வாய்கள் சீரமைக்கவும் அரசு முயற்சிகள் மேற்கொள்ளவில்ல்லை என பொதுமக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர். ஆனால் அரசு அதற்கான எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. தர்மபுரம் ஊராட்சி வெள்ளாரன்விளை பகுதியில் உள்ள பெருங்குளம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் விவசாயிகளுக்கு வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கப்பட்டு விவசாயிகள் மண் எடுத்தனர். குளத்தை சுற்றி உள்ள ஆக்கிரமிப்புகள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் நேற்று இந்த குளத்தின் கரையில் ராஜாக்கமங்கலம் ஒன்றியம் சார்பில் திடீரென ஒரு கல்வெட்டு அமைக்கப்பட்டது. அதில் பெருங்குளம் கரை மேம்பாடு செய்யப்பட்டதாகவும், 30-05-2019 முதல் 24-07-2019 வரை தினக்கூலி 200 ருபாய் சம்பளத்தில் 2527 பேர் பணி செய்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. இதனை பார்த்த பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஏற்கனவே பொதுமக்கள் சார்பில் பெருங்குளத்தின் ஆக்கிரமிப்புகளை அகற்றி, குளத்தை முறையாக தூர் வார வேண்டும். குளத்திற்கு தண்ணீர் வந்து செல்லும் கால்வாயை காணவில்லை கண்டுபிடித்து தாருங்கள் என அதிகாரிகளுக்கு மனு கொடுத்து வரும் நிலையில் பணிகளே செய்யாமல் எட்டரை லட்ச ருபாய் செலவு செய்ததாக வைத்தது ஏன்?. பணி எங்கே நடந்தது?. என ஒன்றிய ஆணையாளரிடம் பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு கால்வாய் சுத்தம் செய்ததாக கூறி அவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். அதிகாரிகள் உடனடியாக வைத்த கல்வெட்டை அங்கிருந்து அகற்றினர். பணிகளே செய்யாமல் நிதியை அதிகாரிகளே கையாடல் செய்துள்ளதாகவும், ஊழல் செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், லஞ்ச ஒழிப்பு போலிசாரிடமும் புகார் மனு அளிக்க உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர். Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.