ETV Bharat / state

திருவள்ளுவர் பெயரில் சொகுசு படகு! சோதனை ஓட்டம் வெற்றி!

author img

By

Published : Sep 27, 2020, 9:22 PM IST

கன்னியாகுமரி: பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகத்தில் புதிதாக இணைக்கப்படவுள்ள முதல் சொகுசு படகின் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

திருவள்ளுவர் பெயரில் சொகுசு படகு! சோதனை ஓட்டம் வெற்றி!
திருவள்ளுவர் பெயரில் சொகுசு படகு! சோதனை ஓட்டம் வெற்றி!

சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் கடலின் நடுவே அமைந்துள்ள சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபம் மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு மூலம் சென்றுவருவது வழக்கம். பூம்புகார் கப்பல் போக்குவரத்துக் கழகம் சார்பில் தற்போது நான்கு படகுகள் இயக்கப்பட்டுவருகிறது. இந்நிலையில் ஐந்தாவதாக திருவள்ளுவர் பெயரில் எம்.எல்.திருவள்ளுவர் படகு 4.35 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கன்னியாகுமரி வரலாற்றில் முதல்முறையாக அதிநவீன குளிரூட்டப்பட்ட புதிய சொகுசு படகு கோவாவிலிருந்து கட்டுமான பணிகள் நிறைவடைந்து நேற்று கன்னியாகுமரிக்கு வந்தடைந்தது.

திருவள்ளுவர் பெயரில் சொகுசு படகு! சோதனை ஓட்டம் வெற்றி!

இந்நிலையில் இன்று புதிய சொகுசு படகின் சோதனை ஓட்டம் கடல்சார் வாரியத்தின் அலுவலர்களால் பூம்புகார் படகுத் துறையில் இருந்து கடலுக்குள் சுமார் இரண்டு மணி நேரம் பயணம் செய்து பரிசோதனை நடைபெற்றது. பின்னர் சுவாமி விவேகானந்தர் நினைவு மண்டபத்தில், புதிய படகினை நிறுத்தி பயணிகள் ஏறிவதற்கும், இறங்குவதற்கும் ஏதேனும் சிரமம் உள்ளதா என ஆய்வு நடத்திய பின்னர், திருவள்ளுவர் படகு பூம்புகார் படகுத்துறைக்கு திரும்பியது.

இந்த சோதனை ஓட்டத்தில் மாவட்ட சுற்றுலா அலுவலர் நெல்சன், பூம்புகார் படகு போக்குவரத்து மேலாளர் செல்லப்பா, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழக பொதுமேலாளர் யுவராஜ் உட்பட பலர் உடன் இருந்தனர். இந்த சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றதையடுத்து, சுற்றுலா பயணிகளை ஏற்றிச் செல்ல வசதியாக பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தால் அதிவிரைவில் கடல்சார் வாரியத்தின் அனுமதி பெறப்படும் என்றும், கரோனா ஊரடங்கு காலம் முடிந்த பிறகு சுற்றுலா பயணிகளுக்கு பயணிகள் கட்டணம் எவ்வளவு என நிர்ணயம் செய்யப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்றும் அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ‘அண்ணா பல்கலைக்கழக பெயர் மாற்ற விவகாரம்: போராட்டத்தை ஒத்திவைத்த ஆசிரியர்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.