ETV Bharat / state

சாமி கொடுத்தும் பூசாரிக்கு மனமில்லை? - வனத்துறையால் மலை கிராம மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கிறதா?

author img

By

Published : Mar 26, 2023, 6:43 AM IST

Etv Bharat
Etv Bharat

கன்னியாகுமரி மாவட்ட மலை கிராமங்களில் புயல் மழையால் பாதிக்கப்பட்ட வீடுகளை பராமரிக்க தேவையான கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல வனத்துறை தடை விதிப்பதாக கிராம மக்கள் தெரிவித்து உள்ளனர்.

கன்னியாகுமரி: தோவாளை தாலுக்காவுக்கு உட்பட்ட தடிக்காரண்கோணம் மக்கள், ஊராட்சி மூலமாக அரசுக்கு வரி கட்டி தலைமுறை தலைமுறையாக குடும்பத்துடன் வாழ்ந்து வருகின்றனர். குறிப்பாக வாழையத்து வயல், பால்குளம், கரும்பாறை , கீரிப்பாறை உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட மலை கிராமங்களில் 3000-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில் இரண்டு கிராமங்களில் பழங்குடியினர் வசிக்கின்றனர்.

வனத்துறையின் ஒருதலைப்பட்ச தடையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு தவிக்கும் மலை கிராம மக்கள்!!

இந்த பழங்குடியின மக்கள் விவசாயத்தை பிரதானமான தொழிலாக கொண்டும், ரப்பர் பால் வெட்டும் தொழில் செய்தும், அன்றாட கூலி வேலைகளுக்கு சென்றும் வாழ்ந்து வருகின்றனர்.

இந்த பழங்குடியின மக்களின் குழந்தைகள் பள்ளி கல்லூரிகளில் சென்று படித்தும் வருகின்றனர். ஒகி புயலின் போது இந்த மலை கிராமங்களில் பெரும் சேதம் ஏற்பட்டு பல மரங்கள் புயலின் காரணமாக சரிந்து விழுந்தன. இதில் பல்வேறு வீடுகள் இடிந்து தரைமட்டம் ஆனது.

ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலை பள்ளியில் காம்பவுண்ட் சுவர் மற்றும் கழிப்பிடங்கள் இடிந்து விழுந்து ஆறு மாதம் ஆகியும் இதுவரை சீரமைக்கப்படவில்லை. இவை அனைத்தையும் அரசு கணக்கு எடுத்து, ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகளை கட்டிட தேவையான நிதி உதவிகளையும், பொருள் உதவியும் வழங்கியது. பல்வேறு தொண்டு நிறுவனங்களும் இந்த ஏழை மக்களுக்கு வீடுகளை கட்ட உதவிகள் பல புரிந்தன.

சேதம் அடைந்த வீடுகளுக்கு பழுதுபார்ப்பு பணிகள் செய்ய அரசும், தொண்டு நிறுவனங்களும் கொடுத்த செங்கல், கருங்கல், மணல் , கம்பி , சிமென்ட் உள்ளிட்ட கட்டுமான பொருள்கள், மலை கிராமங்களில் உள்ள தங்கள் வீடுகளுக்கு கொண்டு செல்ல வேண்டும். ஆனால் அரசாலும், தொண்டு நிறுவனங்களாலும் கொடுக்கப்பட்ட கட்டுமான பொருட்கள் மற்றும் அந்த பகுதிகளில் வசித்து வரும் மக்கள் விலை கொடுத்து வாங்கிச் செல்லும் பொருள்களையும், மலை அடிவாரங்களில் வசித்து வரும் பொதுமக்கள் கொண்டு செல்ல வனத்துறை தடை விதித்துள்ளது.

அதே வேளையில் எஸ்டேட் அதிபர்களுக்கு இந்த தடையில் இருந்து விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் எந்த நேரமும், எந்த பொருட்களையும் எடுத்து செல்ல எந்தவிதமான தடையும் இல்லை. வனத்துறை இப்படி ஒரு தலைபட்சமாக செயல்படுவதற்கு மாவட்டத்தில் உள்ள அரசியல் தலைவர்கள் மற்றும் உயர் அதிகாரிகளின் வாய்மொழி உத்தரவு என கூறப்படுகிறது. ஒரு தலைபட்சமாக நடந்து வரும் இந்த செயலை தடுக்க எந்த அதிகாரியும் மாவட்டத்தில் இல்லை என கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

மழைக்காலம் வருவதற்குள் அரசு பள்ளி கூடத்தையும், தங்கள் வீடுகளையும் செப்பனிட்டு பணிகளை முடிக்கவில்லை என்றால் பெரும் புயல் மழை வரும் போது மீண்டும் பல்வேறு சேதங்கள் ஏற்படும் என்றும் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை மிகவும் பாதிக்கப்படுவார்கள் என இந்த பகுதியில் வசித்து வரும் மலைவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

வனத் துறையினரின் ஒருதலைப்பட்சமான தடையால், தங்களுடைய இருப்பிட வாழ்வாதாரம் மிகப்பெரிய ஒரு கேள்விக் குறியாக அமைந்து உள்ளதாகவும், அரசு எங்களை புறக்கணித்து வருவதாகவும் மலை கிராம மக்கள் வேதனை தெரிவித்துள்ளனர். மேலும் அங்குள்ள ஆதிதிராவிடர் நலத்துறை அரசு மேல்நிலை பள்ளி ஆறு மாதம் மேலாகியும் சீரமைக்கப்படாததால் மழை வந்தால் வகுப்பறைக்குள் பெருவெள்ளம் வரும் பட்சத்தில் மாணவ மாணவியர்களுக்கு பரிதாப நிலை ஏற்படும் என பெற்றோர்கள் பெரும் கவலை தெரிவித்து உள்ளனர்.

இதையும் படிங்க ரூ.1 லட்சம் வண்டியால் ஓயாத தொல்லை - நீதிமன்றத்தை நாடிய பெண்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.