ETV Bharat / state

கரோனா: சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடிய கன்னியாகுமரி!

author img

By

Published : Apr 16, 2021, 7:24 PM IST

Updated : Apr 16, 2021, 7:30 PM IST

கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் கரோனா இரண்டாம் அலை பரவல் காரணமாகச் சுற்றுலாப் பயணிகளின் வருகை அடியோடு நின்றதால் வெறிச்சோடி காணப்படுகிறது.

கன்னியாகுமரி
கன்னியாகுமரி

சுற்றுலாத் தலமான கன்னியாகுமரிக்கு வரும் பயணிகள் கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை, சூரிய உதயம், அஸ்தமனம், காந்தி, காமராஜர் மண்டபத்தைச் சுற்றிப் பார்த்து ரசிப்பது வழக்கம்.

கன்னியாகுமரியில் சுற்றுலா தொழிலை நம்பி 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொழில்செய்து பிழைப்பு நடத்திவருகின்றனர். இங்கு கோடை கால சீசன், ஐயப்பா சீசன் என ஆண்டுக்கு 2 சீசன் காலம் நடக்கிறது.

சுற்றுலாப் பயணிகளின்றி வெறிச்சோடி காணப்படும் குமரி
இங்கு நூற்றுக்கும் மேற்பட்ட லாட்ஜ்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட வணிக வளாகங்கள் உள்ளன. இந்நிலையில் கடந்த ஆண்டு கரோனா பரவல் காரணமாக இரண்டு சீசன்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதால் சுற்றுலாப் பயணிகள் வருகையின்றி காணப்பட்டது.
இதனால் இங்குள்ள வியாபாரிகள், லாட்ஜ் உரிமையாளர்கள் கடும் நெருக்கடியில் இருந்துவந்தனர். இந்நிலையில் கடந்த இரண்டு மாதங்களாக ஓரளவுக்குச் சுற்றுலாப் பயணிகள் வந்துகொண்டிருந்த நிலையில் மீண்டும் இந்த வாரத்திலிருந்து இரண்டாம் அலை கரோனா பரவல் காரணமாக பயணிகள் வருகை அடியோடு நின்றது.
இதனால் கன்னியாகுமரி முக்கியச் சாலைகளான கடற்கரைச் சாலை, முக்கடல் சங்கமம் பகுதி, பகவதி அம்மன் கோயில் தெரு, ரதவீதி தெரு போன்ற அனைத்து முக்கியச் சாலைகளும் பயணிகள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகளின் வருகை அடியோடு நின்றதால் சுற்றுலா தொழிலை நம்பி குடும்பம் நடத்திவரும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பொருளாதார ரீதியில் கடும் நெருக்கடியில் இருந்துவருகின்றனர்.
Last Updated : Apr 16, 2021, 7:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.