ETV Bharat / state

குமரியில் கனமழை: செங்கல் தயாரிப்பு முடக்கம்!

author img

By

Published : Nov 1, 2019, 5:31 PM IST

கன்னியாகுமரி: மாவட்டம் முழுவதும் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாகச் செங்கல் தயாரிப்பு தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது.

செங்கல் தயாரிப்பு முடக்கம்!

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி, தோவாளை, செண்பகராமன் புதூர், தாழாக்குடி, திட்டுவிளை, உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களிலிருந்தும், வட மாநிலங்களிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் செங்கல் சூளை தொழிலை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில் குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாகத் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி, தோவாளை, திட்டுவிளை சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. சூளைகளில் சுடுவதற்காகவும் தயாரித்து விற்பனைக்காகவும் வைத்திருந்த சுமார் 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள செங்கற்களும் மழையில் நனைந்து நாசமாகியது.

செங்கல் தயாரிப்பு முடக்கம்!

மேலும் செங்கல் தயாரிப்புக்குத் தேவையான மண் எடுக்கும் பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளதால் தண்ணீர் வற்றிய பின்னரே மண் எடுக்கக் கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. செங்கல் சூளைகளை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் பல்லாயிரக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் வருவாய் இன்றி தங்கள் குடும்பத்துடன் வாழ்வாதாரத்தை பறி கொடுத்துத் தவித்து வருகின்றனர். இதனால் தங்களுக்கு மழைக்கால நிவாரணம் தந்து அரசு உதவ வேண்டும் எனக் கோரிக்கை வைக்கின்றனர் இப்பகுதி மக்கள்.

Intro:கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக செங்கல் தயாரிப்பு தொழில் முற்றிலும் முடங்கியது . பல்லாயிரகனக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு. சூளையில் சுடுவதற்காகவும் தயாரித்துவிற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள செங்கல்கள் மழையில் நனைந்து நாசம். நிவாரணம் தர அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை. Body:tn_knk_03_cengal_tholil_pathipu_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி
கன்னியாகுமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக செங்கல் தயாரிப்பு தொழில் முற்றிலும் முடங்கியது . பல்லாயிரகனக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரம் பாதிப்பு. சூளையில் சுடுவதற்காகவும் தயாரித்துவிற்பனைக்கும் வைக்கப்பட்டு இருந்த சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்புள்ள செங்கல்கள் மழையில் நனைந்து நாசம். நிவாரணம் தர அரசுக்கு தொழிலாளர்கள் கோரிக்கை.
கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி தோவாளை செண்பகராமன் புதூர் தாழாக்குடி திட்டுவிளை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் ஆயிரகனக்கான செங்கல் சூளைகள் செயல்பட்டு வருகின்றது. இங்கு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் வட மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரகனக்கான தொழிலாளர்கள் குடும்பத்துடன் தங்கி வேலை செய்து வருகிறார்கள் . இவர்கள் அனைவரும் செங்கல் சூளை தொழிலை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள் . இந்நிலையில் குமரி மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் கடந்த சில தினங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதில் ஆரல்வாய்மொழி தோவாளை திட்டுவிளை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள ஆயிரகனக்கான செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் தொழில் முற்றிலும் முடங்கியுள்ளது. சூளைகளில் சுடுவதற்காகவும் தயாரித்து விற்பனைக்காகவும் வைத்து இருந்த சுமார் 50 லட்ச ரூபாய் மதிப்பிலான செங்கல்களும் மழையில் நனைந்து நாசமாகியுள்ளது. மேலும் செங்கல் தயாரிப்புக்கு தேவையான மண் எடுக்கும் பகுதிகளும் வெள்ளத்தால் நிரம்பியுள்ளதால் தண்ணீர் வற்றிய பின்னரே
மண் எடுக்க கூடிய நிலையும் ஏற்பட்டுள்ளது. இதனால் செங்கல் சூளைகளில் செங்கல் தயாரிக்கும் பணிகள் முற்றிலும் முடங்கியுள்ளது. செங்கல் சூளைகளை நம்பியே தங்கள் வாழ்வாதாரத்தை நடத்தி வரும் பல்லாயிரகனக்கான ஏழை தொழிலாளர்கள் வருவாயின்றி தங்கள் குடும்பத்துடன் வாழ்வாதத்தை பறி கொடுத்து தவித்து வருகிறார்கள். மழை நின்ற பின்னரும் சகஜ நிலைக்கு திரும்ப பல வாரங்கள் ஆகும் என தெரிவித்த செங்கல் சூளை தொழிலாளர்கள் ஆகவே தங்களுக்கு மழை கால நிவாரணம் தந்து அரசு உதவ வேண்டும் என வேதனையுடன் தெரிவித்தார்கள்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.