ETV Bharat / state

சக தோழிகளை கிஃப்டாக கொடுத்த கிப்டி.. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வைரல்..

author img

By

Published : Aug 25, 2022, 11:28 AM IST

Updated : Aug 25, 2022, 2:25 PM IST

தனது தோழிகளை ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கிய கிப்டி என்ற இளம் பெண்ணின் காதலனை போலீசார் தேடி வரும் நிலையில்,தோழிகளில் ஒருவர் பேசும் ஆடியோ வெளியாகியுள்ளது.

சக தோழிகளை கிஃப்டாக கொடுத்த கிப்டி.. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வைரல்..
சக தோழிகளை கிஃப்டாக கொடுத்த கிப்டி.. பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ வைரல்..

கன்னியாகுமரி மாவட்டம் கல்லுக்கூட்டம் பகுதியைச் சேர்ந்தவர் "கிப்டி" என்ற ஜாபியா ஜாஸ்மின். 20 வயதான இவர் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கிப்டி, குளச்சல் காவல்துறையினரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், “நான் குளச்சல் பர்ணட்டிவிளை பகுதியில் உள்ள பங்களா வீட்டில், வெள்ளிக்கிழமை இரவு எனது ஆண் நண்பர்கள் இருவர் மற்றும் தோழிகள் இருவருடன் எனது பிறந்தநாள் பார்ட்டிக்காக தயாராகி கொண்டிருந்தேன்.

அப்போது அங்கே வந்த எனது பள்ளி தோழனான சுங்கான்கடை பகுதியைச் சேர்ந்த அஜின், வீட்டிற்குள் புகுந்து எனது நண்பர்களை கம்பால் தாக்கி விரட்டியதோடு, என்னையும் மண்டையில் கட்டையால் அடித்து மண்டையை உடைத்து தப்பியோடி விட்டான். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என தெரிவித்திருந்தார்.

இவ்வாறு பெற்ற புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த குளச்சல் காவல்துறையினர், சம்பவம் நடந்த வீட்டை ஆய்வு செய்தனர். அப்போது அங்கு புகைக்கப்பட்ட சிகரெட் துண்டுகள், ஆங்காங்கே வீசப்பட்டு கிடந்த ஆடைகள், ஆணுறைகள் இருந்தன. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் தீவிர விசாரணையை மேற்கொண்டனர்.

சம்பவம் நடந்த பங்களா
சம்பவம் நடந்த பங்களா

காதலனுக்கு பாய் பாய்.. தோழர்களுடன் உல்லாசம்: தோழர்களுடன் இந்த விசாரணையில், புகார் அளித்த கிப்டி என்ற இளம்பெண் கருங்கல் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.ஏ. மூன்றாம் ஆண்டு படித்து வருகிறார். இந்நிலையில் தனது பள்ளி தோழனான அஜினை கடந்த ஆறு வருடங்களாக கிப்டி காதலித்து வந்துள்ளார்.

காலையில் காதலனுடன் பைக்கில் டிரிப் அடித்து சந்தோஷமாக சுற்றி வரும் கிப்டி, இரவில் காதலனுக்கு தெரியாமல் தான் வசிக்கும் பங்களா வீட்டிற்கு வேறு சில ஆண் நண்பர்களையும் தோழிகளையும் அழைத்து மது விருந்து கொடுத்து வந்துள்ளார். இது மட்டுமில்லாமல் ஆண் நண்பர்களுடன் அறையில் உல்லாசமாகவும், தோழிகளையும் மதுவுக்கு அடிமையாக்கி அவர்களையும் ஆண் நண்பர்களுக்கு விருந்தாக்கி வந்துள்ளார், கிப்டி.

இதனை அறிந்த காதலன் அஜின், கிப்டியை கண்டித்துள்ளார். ஆனால் இதனை ஏற்க மறுத்த கிப்டி, அஜினின் காதலை முறித்துக் கொண்டுள்ளார். இந்நிலையில் கிப்டி, வெள்ளிக்கிழமை இரவு தனது ஆண் நண்பர்கள் மற்றும் தோழிகளுடன் தனது பெரியப்பாவின் பங்களா வீட்டில் மது விருந்துடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

பாதிக்கப்பட்ட பெண்ணின் ஆடியோ

இதனை தெரிந்து அந்த வீட்டிற்குச் சென்ற அஜின், பங்களா வீட்டின் அருகே இருந்த மரத்தில் ஏறி மாடிக்குச் சென்று பார்த்துள்ளார். அப்போது கிப்டி, அவரது தோழிகள் மற்றும் ஆண் நண்பர்கள் மது போதையில் அரைகுறை ஆடையில் உல்லாசமாக இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.

மேலும் ஆத்திரமடைந்த அஜின், அருகே கிடந்த மரக்கட்டையை எடுத்து ஆவேசமாக அறைக்குள் சென்று அரைகுறை ஆடையில் இருந்த கிப்டியின் நண்பர்களை ஓட ஓட விரட்டியதோடு, கிப்டியின் தலையில் கட்டையால் அடித்துள்ளார். பின்னர் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் வருவதை கண்ட அஜின், அங்கிருந்து தப்பியோடி உள்ளார்.

வாய்ஸ் மெசேஜ்: இதனையடுத்து தப்பியோடிய அஜினை காவல்துறையினர் தேடி வரும் நிலையில், அஜினின் தாயார், கிப்டியால் பாதிக்கப்பட்ட பெண்களின் ஆதாரங்கள் தன்னிடம் இருப்பதாகவும் தனது மகன் மீது தீவிர நடவடிக்கை எடுத்தால் அந்த ஆதாரங்களை வெளியிடுவேன் என பேசியுள்ளார்.

அஜினின் தாயார் பேசிய ஆடியோ

இதனால் பாதிக்கப்பட்ட தோழி ஒருவர் குமுறலுடன் அஜினின் தாயாருக்கு அனுப்பிய வாய்ஸ் மெசேஜ் ஆடியோ தற்போது வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அந்த ஆடியோவில், “மது விருந்துக்குதான் என்னை அழைக்கிறார்கள் என எனக்கு தெரியும். எனவே முதலில் வருவதற்கு மறுப்பு தெரிவித்தேன். பின்னர் வற்புறுத்தலால் சென்று ஒருமுறை தவறு செய்துவிட்டேன்.

இனி அத்தவறை செய்து விடக்கூடாது என்பதற்காகதான், அடுத்து அவர்கள் அழைத்தும் நான் செல்லவில்லை. இனி இவ்வாறு செய்ய மாட்டேன். எனது வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம்” என பேசியுள்ளார். இந்த ஆடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: 70 வயது மூதாட்டி வன்புணர்வு செய்து கொலை

Last Updated : Aug 25, 2022, 2:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.