ETV Bharat / state

தைப்பூசத்தை முன்னிட்டு பூ விலை உயர்வு.!

author img

By

Published : Feb 4, 2023, 11:05 AM IST

தைப்பூசத்தை முன்னிட்டு பூ விலை உயர்வு
தைப்பூசத்தை முன்னிட்டு பூ விலை உயர்வு

கன்னியாகுமரி தோவாளை மலர் சந்தையில் தைப்பூசை முன்னிட்டி பூ விலை அதிகரித்து விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தைப்பூசத்தை முன்னிட்டு பூ விலை உயர்வு

தோவாளை: கன்னியாகுமரி மாவட்டத்தில் புகழ் பெற்ற மலர் சந்தையாக தோவாளை மலர் வணிக வளாகம் இருந்து வருகிறது. இங்கு ஓசூர், சேலம், ராயக்கோட்டை, மதுரை, திண்டுக்கல் மற்றும் உள்ளூர்களான தோவாளை, செண்பகராமன்புதூர், ஆரல்வாய்மொழி உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் விற்பனைக்காக இங்கு மலர்கள் கொண்டுவரப்படுகிறது.

இங்கு கேரளா மாநிலம் மற்றும் கன்னியாகுமரி மாவட்ட உள்ளூர் வாசிகள், நெல்லை, தூத்துக்குடி என அண்டை மாவட்டத்தை சேர்ந்த பூ வியாபாரிகளும் மொத்தமாகவும், சில்லரையாகவும் பூக்களை வாங்கி செல்கின்றனர்.

விசேச தினங்கள், பண்டிகை காலங்களில் பூக்கள் தேவை அதிகரிக்கும் நிலையில் பூக்கள் விலையிலும் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அதிலும் பனிப்பொழிவு, மழை மற்றும் பண்டிகை காலகள் போன்ற நேரங்களில் பூக்கள் விலை அதிக அளவு உயரும்.

அந்த வகையில் தைப்பூசம் மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு பூக்கள் தேவை அதிகரித்துள்ளது. இதன் காரணமாக வெளியூர்களில் இருந்து கொண்டுவரப்படும் பூக்கள் சாதாரண நாட்களை விட இரண்டு மடங்கு அதிகமாக சுமார் 60 டன் பூக்கள் வரையிலும் கொண்டு வரப்பட்டுள்ளன. உள்ளூரில் இருந்து அதிகமாக கொண்டுவரப்படும் பிச்சி, மல்லி பூக்கள் விலையும் சற்று அதிகரித்துள்ளது.

900 ரூபாய் வரையிலும் விற்பனையான ஒரு கிலோ மல்லிகைப்பூ இன்று 1800 முதல் 2100 ரூபாய் வரையிலும், ரூ.1500-க்கு விற்பனை செய்யபட்ட பிச்சிப்பூ 1700 ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதேப்போன்று 100 ரூபாய்க்கு விற்பனையான அரளி மற்றும் ரோஜாப்பூ இன்று 150 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

இதையும் படிங்க: லட்சக் கணக்கில் வளையல்கள்.! கோலாகலமாக நடந்த குங்குமவல்லி அம்மன் வளைகாப்பு 2

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.