ETV Bharat / state

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை!

author img

By

Published : Jan 10, 2020, 8:08 AM IST

robbers break house lock
robbers break house lock

கன்னியாகுமரி: பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 பவுன் நகை திருடப்பட்ட சம்பவம் கன்னியாகுமரி மாவட்டத்தில் நடந்துள்ளது.

கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் தாணுமாலையபெருமாள்.

இவர் நேற்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோயில் பெருந்திருவிழாவிற்கு சென்றுள்ளனர்.

மதியம் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளதை கண்டு அதிச்சி அடைந்த அவர், வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 25 பவுன் தங்கநகைகள் மற்றும் ரூ.40 ஆயிரம் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து அவர் காவல்நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்களும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

கொள்ளை போன வீட்டின் அருகே நெருக்கமாக வீடுகள் இருந்தும் பட்டப்பகலில் வீட்டின் முன்புற கதவு உடைக்கப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டதால் உள்ளூரை சேர்ந்தவர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பட்டப்பகலில் வீட்டின் பூட்டை உடைத்து 25 சவரன் கொள்ளை

பட்டப்பகலில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: கோயில் பூட்டை உடைத்து பணம் திருட்டு-திருடர்களுக்கு வலைவீச்சு

Intro:கன்னியாகுமரி அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 25 பவுன் நகைகொள்ளை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.Body:tn_knk_05_house_theft_script_TN10005
கன்னியாகுமரி,எஸ்.சுதன்மணி

கன்னியாகுமரி அருகே பூட்டியிருந்த வீட்டை உடைத்து 25 பவுன் நகைகொள்ளை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரியை அடுத்த பஞ்சலிங்கபுரத்தை சேர்ந்தவர் தாணுமாலையபெருமாள்.ஒய்வு பெற்ற போக்குவரத்து கழக ஊழியர்.இன்று காலை வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் சுசீந்திரம் தாணுமாலையன் சாமி கோயில் பெருந்திருவிழாவிற்கு சென்றுள்ளனர். மதியம் வீட்டிற்கு வந்த போது முன்பக்க கதவு திறந்து கிடந்துள்ளதை கண்டு அதிச்சி அடைந்த தாணுமாலையபெருமாள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோவை உடைக்கப்பட்டு உள்ளே இருந்த 25 பவுன் தங்கநகைள் மற்றும் 40 ஆயிரம் ரூபாய் ரொக்கப்பணம் திருடப்பட்டது தெரியவந்தது. இதனையடுத்து கன்னியாகுமரி போலீசில் கொடுத்த புகாரின் பேரில் கைரேகை நிபுணர்களும் மோப்பநாயும் வரவழைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. கொள்ளை போன வீட்டின் அருகே நெருக்கமாக வீடுகள் இருந்தும் பட்டபகலில் வீட்டின் முன்புற கதவு உடைக்காப்பட்டு நகை கொள்ளையடிக்கப்பட்டதால் உள்ளூரை சேர்ந்தவர்களின் தொடர்பு இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.பட்டபகலில் நகை மற்றும் பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதுConclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.