ETV Bharat / state

75-ஆவது சுதந்திர தினம் : பிஞ்சு உள்ளங்கைகளால் மூவர்ணம் தீட்டப்பட்ட தேசியக்கொடி

author img

By

Published : Aug 6, 2022, 6:09 PM IST

75 ஆவது சுதந்திர தினம் : பிஞ்சு உள்ளங்கைகளால் மூவர்ணம் தீட்டிய இந்தியக் கொடி
75 ஆவது சுதந்திர தினம் : பிஞ்சு உள்ளங்கைகளால் மூவர்ணம் தீட்டிய இந்தியக் கொடி

75-ஆவது சுதந்திர தின விழாவை முன்னிட்டு காஞ்சிபுரத்தில் உள்ள தனியார் மழலையர் பள்ளி குழந்தைகளின் பிஞ்சு உள்ளங்கை பதிவுகளால் மூவர்ணம் தீட்டி உருவான இந்திய தேசிய கொடி கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பிடித்துள்ளது.

காஞ்சிபுரம்: நாடு முழுவதும் 75 ஆவது சுதந்திர தின விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், வீடுகள் தோறும் தேசிய கொடியை ஏற்ற வேண்டுமென பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். அந்த வகையில் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள எல்லப்பா நகரில் செயல்பட்டு வரும் தனியார் மழலையர் பள்ளி நிர்வாகத்தினர் 75 ஆவது சுதந்திர தின விழாவை மாறுபட்ட வகையில் கொண்டாட முடிவு செய்தனர்.

இதனைத்தொடர்ந்து மழலையர் பள்ளியில் படிக்கும் 2 வயது முதல் 6 வயதுடைய 100க்கும் மேற்பட்ட மழலை குழந்தைகளைக் கொண்டு, 12 அடி உயரமும், 36 அடி நீளமும் கொண்ட மிகப்பெரிய வெள்ளை நிற கொடியில் மழலை குழந்தைகளின் பிஞ்சு கைகளில் பச்சை,ஆரஞ்சு, நீலம் வண்ணங்களை தடவி சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட உள்ளங்கை அச்சு பதிவின் (Palm Prints) மூலம் வெள்ளைக் கொடியில் மூன்று மணி நேரத்தில் தேசியக் கொடியை தயாரித்து சாதனை செய்தனர்.

75 ஆவது சுதந்திர தினம் : பிஞ்சு உள்ளங்கைகளால் மூவர்ணம் தீட்டிய இந்தியக் கொடி
75 ஆவது சுதந்திர தினம் : பிஞ்சு உள்ளங்கைகளால் மூவர்ணம் தீட்டிய இந்தியக் கொடி

பச்சிளம் குழந்தைகள் உள்ளங்கை பதிவினால் தயாரித்த இந்த தேசியக் கொடியை கலாம் சாதனை புத்தக பதிவாளர்கள் கண்காணித்து அதனை சாதனை புத்தகத்தில் பதிவு செய்தனர். மேலும், மூன்று மணி நேரத்தில் 36 அடி தேசிய கொடியை செய்து சாதனை செய்த பள்ளி நிர்வாகத்திற்கும் பங்கு கொண்ட மழலை குழந்தைகளுக்கும் கலாம் சாதனை புத்தகம் சார்பில் அதற்கான சான்றிதழ்களும் கேடயங்களும் வழங்கப்பட்டது.

75 ஆவது சுதந்திர தினம் : பிஞ்சு உள்ளங்கைகளால் மூவர்ணம் தீட்டிய இந்தியக் கொடி

தேசியக்கொடி உருவாக்கிய நிகழ்வு, கலாம் சாதனை புத்தகத்தில் இடம் பெற்றதை அறிவித்தவுடன், மழலை குழந்தைகளும், பள்ளி நிர்வாகத்தினரும், தேசியக் கொடிகளை அசைத்து, வந்தே மாதரம், ஜெய்ஹிந்த் என கோஷங்களை எழுப்பி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இதையும் படிங்க: காஞ்சிபுரம் IFS நிதி நிறுவனத்தின் கிளை இயக்குநர் வீட்டிற்கு சீல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.