ETV Bharat / state

தடுப்பூசி போட்ட குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் சாலை மறியல்!

author img

By

Published : Jun 25, 2021, 2:42 PM IST

காஞ்சிபுரத்திலுள்ள அரசு மருத்துவமனையில் பிறந்த ஆண் குழந்தைக்கு தொடர்ந்து இரண்டு தடுப்பூசிகள் போட்டதால் குழந்தை உயிரிழந்துள்ளதாகக் கூறி உறவினர்கள் சாலை மறியல் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

http://10.10.50.85//tamil-nadu/25-June-2021/tn-kpm-01-gh-new-born-child-death-issue-pic-vis-byte-script-tn10033_25062021103919_2506f_1624597759_54.jpg
http://10.10.50.85//tamil-nadu/25-June-2021/tn-kpm-01-gh-new-born-child-death-issue-pic-vis-byte-script-tn10033_25062021103919_2506f_1624597759_54.jpg

காஞ்சிபுரம்: செவிலிமேடு பகுதியில் தங்கி வேலை செய்து வருபவர்கள் கோபி - மாலதி தம்பதி. இவர்களுக்கு ஜூன் 23ஆம் தேதியன்று காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. இதையடுத்து, குழந்தைக்கு மருத்துவர்கள் மஞ்சள்காமாலை தடுப்பூசி போட்டனர். மறுதினமே (ஜூன் 24) தோல் தடுப்பூசியும் போட்டுள்ளனர்.

தடுப்பூசி போடப்பட்ட மூன்றுமணி நேரத்தில் குழந்தை மயங்கியுள்ளது. இதனால் பதறிய பெற்றோர், மருத்துவரிடம் காண்பித்தனர். அங்கு குழந்தையை பரிசோதித்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர், பிறந்த குழந்தைக்கு 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 2 தடுப்பூசிகள் போட்டதன் காரணமாகதான் குழந்தை உயிரிழந்ததாக கூறி தடுப்பூசி போட்ட மருத்துவர்கள் மீது குற்றம் சுமத்தினர்.

காவல் துறை விசாரணை:

இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவர்களது உறவினர்கள் மருத்துவமனை முன்பு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல் துறையினர், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தையடுத்து, உறவினர்கள் சாலை மறியலை கைவிட்டனர்.

குழந்தை உயிரிழப்பு

இந்தச் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மருத்துவமனை நிர்வாகத்திடம் விசாரணை நடத்தினர். ஆனால், நிர்வாகம் பதில் கூற மறுத்துவிட்டது. இதனால், குழந்தையின் உடலை உடற்கூராய்வு செய்த பின்னரே இறப்புக்கான காரணங்களை கண்டறிய முடியும் எனக் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: தனியார் மருத்துவமனையில் பிறந்த குழந்தை உயிரிழப்பு: உறவினர்கள் ஆர்ப்பாட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.